Seetha Raman: ராமை வெறுப்பேற்றும் சீதா: ராஜசேகரிடம் சிக்கும் ஆதாரம்: சீதா ராமன் இன்று!
ராம், “அப்பா இவளை இதையெல்லாம் செய்ய வேண்டாம்னு சொல்லி வையுங்க” என சொல்லி கிளம்ப, ராஜசேகர் சில ரிப்போர்ட்டுகளுடன் சேதுவை சந்தித்துப் பேச வருகிறார்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா ராமை விவாகரத்து செய்ய முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் .
அதாவது, சீதா கோலம் போட்டுக் கொண்டிருக்க சத்யாவும் அஞ்சலியும் வெளியே வருகின்றனர், சத்யா “நானும் உங்களோட சேர்ந்து கோலம் போடவா அண்ணி?” எனக் கேட்க, அஞ்சலி, கொலைகாரி எனப் பேச, “இப்போ இன்னொரு கொலையை செய்யப் போறேன்” என அஞ்சலி கழுத்தை நெரித்து பயம் காட்டுகிறாள்.
அதன் பிறகு சீதா ராமின் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டு கொண்டிருக்க, ராம் வெளியே வந்து “நீ எதுக்கு இதையெல்லாம் பண்ணிட்டு இருக்க?” என கோபப்பட, அர்ச்சனா “நீ இப்படி எல்லாம் பண்றதால் ராம் உன்னை சும்மா விட்டுடுவானு மட்டும் நினைக்காதே” என சொல்கிறாள்.
உடனே சீதா “கோர்ட்டில் நிறைய உண்மை வெளியே வரும் அப்போ தெரியும்” என பதிலடி கொடுக்க, “என்ன உண்மை?” என அர்ச்சனா பதறிப் போய் கேட்கிறாள். “நான் தான் கொலைகாரின்னு சொல்லுவாங்க, ஆதாரம் அப்படி தானே இருக்கு, என்ன பாஸ் நான் சொல்றது சரி தானே?” என டீஸ் பண்ணுவது போல பேசுகிறாள்.
பிறகு ராம், “அப்பா இவளை இதையெல்லாம் செய்ய வேண்டாம்னு சொல்லி வையுங்க” என சொல்லி கிளம்ப, ராஜசேகர் சில ரிப்போர்ட்டுகளுடன் சேதுவை சந்தித்துப் பேச வருகிறார். “சீதா ரெண்டு புல்லட் தான் யூஸ் பண்ணா, அதுக்கு அப்புறமும் குண்டு குறைந்திருக்கு. அப்படினா வேற யாரோ துப்பாக்கியை பயன்படுத்தி இருக்காங்க?” என சொல்கிறாள்.
அதே போல் “கைக்கு கிளவுஸ் போட்டு தான் பயன்படுத்தி இருக்காங்க, அதனால் தான் கை ரேகை சீதாவுடையதாக இருக்கு” எனவும் சொல்ல, அஞ்சலி “நீங்க என்ன எங்க அண்ணனை விட பெரிய போலீசா?” என நக்கலாகப் பேச, ஆவேசப்படும் சேது அஞ்சலியை கை நீட்டி அறைகிறார். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Poonam Pandey Death: நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!