Rithika Marriage: ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சிட்டு...ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பாக்கியலட்சுமி நடிகை..!
சின்னத்திரை தொகுப்பாளராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டு பலருக்கும் நன்கு அறிமுகமானவர் ரித்திகா.
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகை ரித்திகா தனது திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
சின்னத்திரை தொகுப்பாளராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டு பலருக்கும் நன்கு அறிமுகமானவர் ரித்திகா. இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சக போட்டியாளர் பாலா காமெடிக்காக பேசி பழகுவதை வைத்து பலரும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல் பரப்பி வந்தனர்.
View this post on Instagram
ஆனால் அதை மறுத்த அவர் நண்பர்களாக பழகுபவர்கள் எல்லாம் காதலித்து விடுவார்களா? என கோபமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் அதில் இருவர் ஒன்றாக சேர்ந்து நடித்தாலோ அல்லது வேலை செய்தாலோ உடனே காதல் என்று சொல்லி விடுவீர்களா? இப்படி யாரும் பேசாதீர்கள் என்று தவறான தகவல் பரப்பியவர்களை கண்டித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த பாக்கியலட்சுமி நாடகத்தில் அம்ரிதா கேரக்டரில் ரித்திகா நடித்து வருகிறார். அந்த நாடகத்தில் இவருக்கும் எழிலுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். வினு என்பவரை திருமணம் செய்துள்ள நிலையில், இந்நிகழ்வு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளது.
View this post on Instagram
தம்பதியினர் சகிதமாக மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள ரித்திகா அதில் இறுதியாக...!! திருமதி.வினு கடவுளின் கிருபையுடன் உங்கள் அனைவரின் அன்பும் ஆசியும் எங்களுக்கு வேண்டும் என தெரிவித்துள்ளார். ரித்திகாவின் திருமண வரவேற்பு நவம்பர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தம்பதியினருக்கு தெரிவித்துள்ளனர்.