Pandian Stores 2: அரசியை பழிவாங்க நினைத்து... ஆப்பு வைத்துக்கொண்ட குமாரவேலு! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஜூன் 21-ஆம் தேதி நடந்த சுவராஸ்யமான சம்பவங்கள் பற்றி பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் இன்று ஒளிபரப்பான 512 ஆவது எபிசோடில் அரசி தனக்கு தேவையான புது ஆடைகளை வாங்கி கொள்ள கடைக்கு சென்றார். அவருடன் குமாரவேலு சென்றார். அரசி எடுப்பதை பார்த்து கோபமும், அதிர்ச்சியும் அடைந்த குமரவேல், தான் வெளியில் நிற்பதாக சொல்லிவிட்டு காரில் ஏறி வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர் தன் அப்பாவிடம், சில நாட்களுக்கு முன் அரசி தன் மீது சாம்பார் ஊற்றி விட்டார் என்று சொல்கிறார். இதனால் கோபம் கொண்ட சக்திவேல் பாண்டியனை பழிவாங்க திட்டம் போடுகிறார். இதற்கிடையில் கடையில் தேவையான புதிய ஆடைகளை எடுத்த அரசி தனது கணவரை தேடி பார்த்தார். அவர் இல்லாத நிலையில் கடை ஊழியரிடம் விசாரித்தார். அவர் எப்போது சென்று விட்டதாக கூற, சிறிது நேரம் பில் கவுண்டரில் நின்று கொண்டிருந்தார்.
தொடர்ந்து, நான் அரசியை அவமானப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அதனால் அவரை அங்கேயே விட்டு விட்டு வந்துட்டேன். அவரிடம் காசு இல்லை. பில் கவுண்டரில் காசு கேப்பாங்க. அவர் இல்லை என்று சொல்லிவிடுவார் என்று சிரித்து கொண்டிருந்தார்.
ஆனால் அரசியோ கிரிடிட் கார்டு மூலமாக பில் காட்டிவிட்டார். இது தொடர்பாக குமரவேல் செல்போனுக்கு மெசேஜ் வர அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ரூ. 17, 000க்கு அரசி புது டிரஸ் இடுத்திருப்பதாக கூறி பதறுகிறார்.
அதன் பின்னர் தான் தனது பர்ஸை தேடி பார்த்திருக்கிறார். பர்ஸ் இல்லை என்பது அறிந்து உடனே கடைக்கு செல்கிறார். அங்கு அரசி காத்து கொண்டிருந்தார். அவரிடம் கார்டு எப்படி எடுத்த, பின் நம்பர் எப்படி தெரியும்? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அரசி, உன்னுடைய பரிசீலித்து தான் எடுத்தேன், நம்பர் உங்களுடைய போனிலிருந்து எடுத்தேன் என்று கர்வத்தொடு பதிலடி கொடுக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க அடுத்த காட்சியாக கோமதி மயில் தொடர்பாக காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதில் குழந்தை பிறந்த பிறகு வேலைக்கு செல்வது பற்றி இருவரும் கொள்கிறார்கள். மயில் குழந்தை பிறந்த பிறகு வேலைக்கு செல்லமாட்டென் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 512ஆவது எபிசோட் முடிவடைகிறது.





















