Neeya Naana: கோபிநாத் கேட்ட கேள்வி.. கண்ணீரோடு பதில் சொன்ன மருமகள் - நீயா நானாவில் உருக்கம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Neeya Naana: நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
நீயா? நானா?
பிக்பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர்போனது விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் “நீயா நானா” (Neeya Naana). சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஆராயும் நிகழ்ச்சியாக நீயா நானா பல ஆண்டுகளாக லைக்ஸ் அள்ளி வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ஷோவை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் 'மருமகள்கள்' மற்றும் 'மாமியாரும், நாத்தனாரும்’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக ப்ரோமோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கண் கலங்கிய மருமகள்:
அதில், கோபிநாத் மருமகள்களிடம் இப்படி கூட என்னுடைய மாமியாரை நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்வதென்றால் நீங்கள் என்ன சொல்வீங்க? என்று கேட்டார். இதற்கு ஒரு பெண், "நான் என்னுடைய கணவரை எப்படி பார்த்துக் கொள்வேனோ அப்படி தான் என்னுடைய மாமியாரையும் பார்த்துக் கொள்வேன். ஏன்னா, அவங்க என் கணவரை பெத்தவங்க. அதனால் நான் அவங்கள இன்னொருபடி மேல தான் பார்ப்பேன்” என்று கண்கலங்கியப்படி பேசினார்.
அதைத் தொடந்து மற்றொரு பெண், ”பெண்கள் எப்போதுமே அம்மா கிட்ட நிறைய வேலை வாங்கிக்கிட்டே இருப்பாங்க. ஆனா, அவர்களுக்கு ரெஸ்ட் வேணும்னா அவங்க மருமகன் கிட்ட தான் இருக்கணும். மாமியார் என்கூட இருந்தா தானே நான் அவங்கள நல்லா பாதுக்க முடியும். அவங்க மகள் கூட இருந்தா வேலை செய்ய சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க" என்று அந்த பெண் கூறினார்.
மருமகள்கள் Vs மாமியாரும் நாத்தனாரும்..!
— Vijay Television (@vijaytelevision) September 22, 2023
நீயா நானா - வரும் ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision pic.twitter.com/IUTYpe1YS4
இதனை அடுத்து, மற்றொரு பெண், "எங்க அம்மாக்கு என்னவெல்லாம் பண்ணணும் நினைக்கிறனோ அதையெல்லாம் என்னுடைய மாமியாருக்கு செய்வேன்” என்று அழுதப்படி கூறினார். இதனால் அரங்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் கண் கலங்கியபடி இருந்தனர். இது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க
Leo Running Time: விக்ரம், மாஸ்டர் படங்கள விட கம்மி நேரம் தான்.. லியோ படத்தின் ரன்னிங் டைம் இதுதான்!