Maari : சூர்யாவின் இரண்டாம் திருமணம்...தாராவுக்கு வந்த புது சிக்கல்...மாரி சீரியலின் இன்றைய ஹைலைட்ஸ் இதோ!
சங்கர பாண்டி மாரி சம்மதம் சொன்னது சந்தோசமாக சொல்ல எனக்கு அதுதான் டவுட்டா இருக்கு. மாரி சம்மதிக்க மாட்டேன்னு நினைச்சா. இப்ப சரி சொல்லிட்டா. எனக்கு என்னமோ பயமா இருக்கு என தாரா தெரிவிக்கிறாள்.

மாரி சீரியலில் மாரி சூர்யாவின் 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், சூர்யாவின் பெற்றோர் சந்தேகமடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் மாரி அனைவரது முன்னிலையிலும் சூர்யாவுக்கு இன்னொரு திருமணம் செய்து வையுங்கள். நான் எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன் என்று சொல்ல சூர்யா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகிறான். ஆனால் மாரியின் முடிவைக் கேட்டு தாரா சந்தோஷமடைகிறாள். இதனையடுத்து மாரியே சொல்லிட்டா. நான் உடனே ஏற்பாடு பண்ண போறேன் என்று தாரா சொல்லிச் செல்கிறார்.
பின்னர் மாரி கிச்சனில் இருக்கும்போது அவரை காண வரும் சூர்யா நீ ஏன் இப்படி சொன்னாய் என்று கேட்கிறார். அதற்கு நீங்கள் என்னிடம் கேட்க யோசிக்கறீர்கள். அதனால் தான் நான் சொன்னேன் என்று சொல்ல சூர்யா சோகமாக செல்கின்றார். அவரது முகத்தை பார்க்கும் தாராவும் சங்கரபாண்டியும் என்னவென்று யோசிக்கின்றனர்.
View this post on Instagram
இதனையடுத்து சங்கர பாண்டி மாரி ஒத்துக்கிட்டா என்று சந்தோசமாக சொல்ல எனக்கு அதுதான் டவுட்டா இருக்கு. மாரி ஒத்துக்க மாட்டேன்னு நினைச்சா. இப்ப சரி சொல்லிட்டா. எனக்கு என்னமோ பயமா இருக்கு என தாரா தெரிவிக்கிறாள். வீட்டுக்கு போலீஸ் வருகிறது. அவர்களுடன் விக்ரம் வர அனைவரும் இது யார் என்று கேட்கிறார்கள். உடனே விக்ரம் பாலில் விஷம் வைத்தது யார் என எனக்கு தெரியும் என்று சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார். அப்போது அங்கு வரும் ஹாசினி விக்ரமை பார்த்து அண்ணன் என்று சொல்ல அனைவரும் கூடுதல் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதேசமயம் மாரியை பார்த்து விக்ரம் யோசிக்க பின்னர் இருவரும் நல்லா இருக்கீங்களா என விசாரித்து கொள்கின்றனர். என்ன நடக்கிறது என அனைவரும் குழம்புகின்றனர். ஆனால் முன்னால் ஒரு பிரச்சனையில் என் உயிரை மாரி தான் காப்பாற்றினாள் என்று விக்ரம் சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அனைவரும் சென்றபின் ஹாசினி விக்ரமை தனியாக அழைத்துச் சென்று விஷப்பாட்டிலை கையில் கொடுக்கிறார். மேலும் சூர்யாவை கொல்ல பார்ப்பது யார் என கண்டுபிடித்து சொன்னால் தான் மாரியும் சூர்யாவும் ஒன்று சேர முடியும் என சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

