Karthigai Deepam: கார்த்திக்கு உதவ மறுக்கும் தீபா.. ஐஸ்வர்யா தீட்டும் சதி திட்டம் - கார்த்திகை தீபம் இன்று!
Karthigai Deepam: கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் அபிராமி என்னாச்சு என்று விசாரிக்க, நடந்த விஷயங்களை சொல்லி பார்த்துக்கலாம் என்று சொல்கிறான்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் இசையமைப்பாளர் சிதம்பரத்துக்கு சவால் விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்திக்க அப்போது உங்களுக்கும் கார்த்திக்கும் ஏதாவது பிரச்னையா என்று கேட்க, அதெல்லாம் ஒன்றும் இல்லை இன்னும் 1 மாதத்தில் ஒரு ஆல்பம் பாடலை வெளிப்பட போவதாக சொல்லியிருக்கிறார் என்று சொல்ல, ஐஸ்வர்யா இந்த வீடியோக்களை வீட்டில் உள்ள எல்லாரிடமும் காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் அபிராமி என்னாச்சு என்று விசாரிக்க, நடந்த விஷயங்களை சொல்லி பார்த்துக்கலாம் என்று சொல்கிறான். பிறகு தீபா “எப்படி சார்? என்ன பண்ண போறீங்க?” என்று கேட்க, பல்லவியை தான் பாட வைக்கலாம் என முடிவெடுத்து இருப்பதாக சொல்கிறான். “அவங்க வருவார்களா?” என்று கேட்க “அவங்க வார்த்தையில் நியாயம் இருக்கும். அதை நானே பார்த்திருக்கிறேன். அவங்க எனக்கு வாக்கு கொடுத்திருக்காங்க. அதனால் கண்டிப்பா வருவாங்க” என்று சொல்கிறான்.
பிறகு மீனாட்சி தீபாவிடம் “நீ தான் அந்த பல்லவினு உண்மையை சொல்லிடு, இது தான் அதற்கு சரியான சந்தர்ப்பம். அபிராமி, கார்த்தின்னு எல்லாருமே உன்னை ஏத்துப்பாங்க” என்று சொல்ல, தீபா அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறாள். இன்னொரு புறம் இந்த விஷயத்தை நமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவது என யோசிக்கும் ஐஸ்வர்யா சிதம்பரத்தை சந்திக்கிறாள்.
அவரிடம் “கார்த்திக்கை லேசில் எடை போடாதீங்க, அவன் கிட்ட பல்லவினு ஒரு பாடகி இருக்கா. அவ பாடினா நீங்க தோத்து தான் போவீங்க” என்று சொல்லி அவள் பாடிய பாட்டை போட்டு காட்ட சிதம்பரம் ஷாக் ஆகிறார். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Premalatha Vijayakanth: கேப்டன் மீது என்ன வன்மம்... வதந்தி பரப்பாதீங்க.. கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!