மேலும் அறிய
Advertisement
Ethirneechal : பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா? இன்றைய எதிர்நீச்சலில் என்ன?
Ethirneechal : ரேணுகா வட்டிக்காரனுடன் சேர்ந்து தொழில் செய்ய எழும் எதிர்ப்புகள். அனைவருக்கும் தர்ஷினி கொடுத்த அதிர்ச்சி. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (மே 28) எபிசோடில் ஞானத்துக்கு பணம் கொடுத்தவன் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு பிரச்னை செய்கிறான். ரேணுகா இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு கூட அவன் கேட்பதாக இல்லை. குணசேகரன் இதை எல்லாம் பார்த்து எனக்கு தான் அசிங்கமாக இருக்கிறது என அவமானப்படுத்துகிறார். நந்தினி இருக்கும் பணத்தை எடுத்து வந்து கொடுக்கிறேன் என சொன்னாலும் ரேணுகா அதை தடுத்துவிடுகிறாள்.
பணம் கொடுத்த ஞானத்தின் நண்பனின் அண்ணனை சென்று சந்தித்து அவகாசம் கேட்பதற்காக ரேணுகாவும் நந்தினியும் செல்கிறார்கள். அவன் மீட்டர் வட்டி போடுபவனாம். உடனே பணத்தை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் மூன்றே மாதத்தில் வாங்கின 2 லட்சம் 10 லட்சமாக ஏறிவிடும் என்கிறான். அதை கேட்டு ரேணுகாவும் நந்தினியும் அதிர்ச்சி அடைகிறார்கள். "நான் ஏற்கனவே டான்ஸ் கிளாஸ் ஒன்று நடத்தி வந்தேன். நிறைய பிள்ளைகளுக்கு ஆன்லைனில் கூட பரதம் சொல்லி கொடுத்தேன். இடையில் ஏற்பட்ட பிரச்னையால் என்னால் அதை தொடர முடியாமல் போனது. நான் திரும்பவும் அதை ஆரம்பிக்க போகிறேன். உங்களுடைய பணத்தை திருப்பி தந்து விடுகிறேன். கொஞ்சம் அவகாசம் கொடுங்க " என ரேணுகா சொல்கிறாள்.
அதை கேட்டு வட்டிக்காரன் "என்னிடம் ஒரு இடம் இருக்கிறது. அங்கே என்னுடைய அப்பா பெயரில் நடன பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடத்திக்கோ. என்னுடைய பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கணும். இதுக்கு ஒத்துவரவில்லை என்றால் பணத்தை உடனே திருப்பி குடு. நல்லா யோசித்து சொல்லுங்க" என்கிறான். நந்தினியும் ரேணுகாவும் குழப்பத்துடன் வீடு திரும்புகிறார்கள்.
ஆபீஸில் வி.கே ஜனனியை மட்டம் தட்டி பேசுகிறான். அந்த நேரத்தில் கம்பனி சேர்மேன் வந்து ஜனனியின் வேலையை பற்றி பாராட்டி பேசுகிறார். அவரின் வருகையால் ஷாக்கான வி.கே முழிக்கிறான். உள்ளே ஜனனியையும் மீட்டிங்கில் கலந்து கொள்ள சொல்கிறார் சேர்மன். அவரின் அடுத்த திட்டம் பற்றி ஜனனியிடன் யோசனை கேட்கிறார். அப்போது புதிதாக ஒருவர் வேலைக்குச் சேர வந்துள்ளார். அவரை நீங்கள் சந்திக்க வேண்டும் என சொல்லி மேனேஜர் அழைத்து வருகிறார். அந்த புதிதாக வேலையில் சேர வந்து இருக்கும் நபர் சக்தி. சக்தியை பார்த்து ஜனனி அதிர்ச்சி அடைகிறாள். இது தான் நேற்றைய எபிசோட் கதைக்களம்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வட்டிக்காரனை சந்தித்து வீட்டுக்கு வந்த நந்தினியும் ரேணுகாவும் நடந்தது பற்றி சொல்லி கொண்டு இருக்கையில் அதை கேட்ட குணசேகரன் அவர்கள் பிரச்சினையில் தலையிடுகிறார். "நீங்க என்ன வேணும்னா பண்ணுங்க. நான் தலையிட மாட்டேன். ஆனா இங்க இருந்து ஜெயிச்சு காட்டுங்கன்னு வசனம் எல்லாம் பேசுனீங்க" என சரியாக பதிலடி கொடுக்க "கடன்காரன் பணம் கொடுக்கறதுக்காக என்கிட்டே வந்து டான்ஸ் ஆடுங்கன்னு சொல்றான். பணத்துக்காக என்ன வேணாலும் செய்வீங்களா டா" என அசிங்கமாக பேச குரலை உசத்தி கையை நீட்டி "ஏய்! தேவைல்லாததை எல்லா பேசிகிட்டு இருக்காதீங்க" என குணசேகரனையே மிரட்டுகிறான் ஞானம்.
அப்போது ஜனனியும் சக்தியும் ஒன்றாக ஆபீஸில் இருந்து வருகிறார்கள். வீட்டில் ஏதோ பிரச்சினை நடப்பதை தெரிந்து கொண்டு அவர்களிடம் சென்று பேசுகிறார்கள். "அந்த ஆளுடன் சேர்ந்து தொழில் பண்றது எனக்கு என்னவோ சரியா படல" என ஞானம் அவனுக்கு விருப்பம் இல்லாததை பற்றி செல்கிறான். "அந்த ஆளு என்ன அப்பாவை விட மோசமானவரா?" என தர்ஷினி கேட்க அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல்(Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion