மேலும் அறிய
Advertisement
Ghilli Actress T.K.Kala: விஜய்யின் ரீல் அம்மா, இனி எதிர்நீச்சல் அப்பத்தா.. சீரியலுக்கு வரும் கில்லி, குருவி பட நடிகை!
Ethirneechal Serial: எதிர்நீச்சல் சீரியலில் அதிரடியாக என்ட்ரி கொடுக்க தயாரான நடிகை... ஜனனிக்கு அப்பத்தாவாக வரும் புதிய கேரக்டரால் திருப்பங்கள் வருமா என எதிர்பார்ப்பு!
Ethirneechal Serial: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஃபேன்பேசாக உள்ளனர். கூட்டுக்குடும்பத்தில் பெண்களை அடிமைப்படுத்துவதும், அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதும், ஆணாதிக்க குணத்தையும் காட்டும் இந்த சீரியலுக்கு வரவேற்புகள் இருந்து வந்தன. ஆண்களின் அடக்குமுறையை எதிர்த்து பெண்கள் எடுக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை கூறும் எதிர்நீச்சல் சீரியல் டாப் 10 இடங்களில் உள்ளது.
அண்மையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரான நடித்த மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், அவரது இழப்பை அடுத்து யார் நிரப்புவார் என்ற கேள்வி எழுந்தது. எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. “ஏய் இந்தாம்மா” என கேட்கும் ஆதி குணசேகரனின் டயலாக் ஃபேமசானது. இந்த சூழலில் மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு அவரது கேரக்டரில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
இவர்கள் தவிர சத்யபிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, விபுராமன் உள்ளிட்ட பலர் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகின்றனர். மாரிமுத்துவின் மறைவால் ஏற்பட்ட சிறு சரிவுக்குப் பிறகு தற்போது எதிர்நீச்சல் சீரியல் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஜனனியின் அண்ணன் மகன்கள் அறிமுகமாகியுள்ளனர். அடுத்ததாக ஜனனியின் அப்பத்தா அறிமுகமாக உள்ளார். ஜனனிக்கு அப்பத்தாவாக ‘கில்லி’ படத்தில் பிரகாஷ் ராஜுக்கு அம்மாவாகவும், குருவி படத்தில் விஜய்க்கு அம்மாவாகவும் நடித்தவரான டி.கே. கலா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
ஜனனிக்கு அப்பத்தாவாக டி.கே.கலா என்ட்ரி ஆனதும் எதிர்நீச்சல் சீரியலில் திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.கே. கலா நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.
மேலும் படிக்க: Parking OTT Release: பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளிய ‘பார்க்கிங்’ ஓடிடி வெளியீடு.. ரிலீஸ் தேதி இதுதான்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion