மேலும் அறிய

Ethirneechal : வெண்பாவுடன் வீட்டுக்கு வந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரி.. ஒட்டுக்கேட்ட கரிகாலன்.. நேற்றைய எதிர்நீச்சல்

Ethirneechal Sep 22 episode : வெண்பாவுடன் வந்த ஈஸ்வரியை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பொய் சொல்லி சமாளித்த ஈஸ்வரி மீது ஜான்சி ராணிக்கும் கரிகாலனுக்கும் சந்தேகம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் வெண்பாவை பற்றி யோசிக்கும் போது ஈஸ்வரி வெண்பாவை நான் பார்த்து கொள்கிறேன் என சொல்ல ஜீவானந்தம் சரி சொல்லிவிடுகிறார். வெண்பாவும் ஈஸ்வரியின் செல்வதை நினைத்து சந்தோஷமாகிறாள். 

வீட்டில் ரேணுகாவும் நந்தினியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "ஜான்சி ராணியை குணசேகரன்தான் ஏவிவிட்டு இருப்பார். இது அவருடைய புதிய பிளானாக கூட இருக்கலாம்" என நந்தினி சொல்கிறாள். ”அவ எதையாவது செய்யட்டும். நீ அவளுக்கு சரிசமமா பேசி உன்னையே ஏன் நீ அசிங்க படுத்திக்காத. அப்பத்தா சொன்ன மாதிரி நாம விறுவிறுன்னு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து போகணும்" என சொல்கிறாள் ரேணுகா. இவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டுக்கொண்டு இருந்த ஜான்சி ராணி அதை போய் விசாலாட்சி அம்மாவிடம் வத்தி வைக்கிறாள். 

Ethirneechal : வெண்பாவுடன் வீட்டுக்கு வந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரி.. ஒட்டுக்கேட்ட கரிகாலன்.. நேற்றைய எதிர்நீச்சல்

நந்தினியும் ரேணுகாவும் பேசியதை திருச்சு பேசி விசாலாட்சி அம்மாவை ஏத்தி விடுகிறாள். "இவளுங்களால தான் அண்ணன் இந்த வீட்டை விட்டுட்டு போனாரு. அதை பத்தி கவலையில்லாம அப்பத்தா சொன்னதை போல அடுத்தடுத்த கட்டத்துக்கு போய்கிட்டே இருக்கணுமாம் அது என்ன கட்டமுன்னு கேட்டு சொல்லுங்க" என்கிறாள் ஜான்சி. 

"இந்த முடிச்சு போடற வேலையெல்லாம் இங்க வைச்சுக்காத. எங்க அத்தை கிட்ட சொல்லிட்டு தான் நான் எல்லாத்தையும் செய்யுறோம். மரியாதை கெட்டு போயிடும்" என சொல்கிறாள் நந்தினி. "என்னடி அடுத்த கட்டம். என்னோட பிள்ளையை காணும்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். உங்களுக்கு இது வசதியா இருக்கா. இத்தோட எல்லாத்தையும் நிப்பாட்டுங்க" என சொல்லிக்கொண்டு இருக்கிறார் விசாலாட்சி அம்மா. 

Ethirneechal : வெண்பாவுடன் வீட்டுக்கு வந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரி.. ஒட்டுக்கேட்ட கரிகாலன்.. நேற்றைய எதிர்நீச்சல்
அந்த நேரத்தில் கார் ஒன்று வர கரிகாலன் "ஐயோ அத்தை அடுத்த இடி வருது" என்கிறான். வெண்பாவுடன் ஈஸ்வரி வந்து இறங்குகிறாள். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 'யாருடி இந்த பொண்ணு?' என விசாலாட்சி அம்மா கேட்கிறார். "இவ பெயர் வெண்பா. என் பிரெண்டோட குழந்தை. அவளுடைய கணவருக்கு உடம்பு சரியில்லை என துபாய்க்கு போயிருக்கா. அதனால கொஞ்ச நாள் வெண்பா நம்ம கூட இங்க இருக்கட்டும்" என்கிறாள் ஈஸ்வரி. 

"இத்தனை நாள் வீட்ல அடைஞ்சு கிடந்த. இப்போ எங்க இருந்து வந்தா இந்த  பிரெண்டு. அன்னிக்கு என்னனா என்னோட பிள்ளையை மரியாதை இல்லாம அவமான படுத்தின. இன்னைக்கு ஏதோ ஒரு குழந்தையை கூட்டிட்டு வந்து நிற்கிற" என திட்ட, "அவங்களை திட்டாதீங்க. உங்களுக்கு நான் இருக்குறது பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. நான் போயிடுறேன். அவங்களை திட்டாதீங்க" என வெண்பா சொல்லவும் விசாலாட்சி அம்மா "பதினைந்து நாள்தான். அத்தோட உன்னோட ஆட்டத்தை முடிச்சுக்க" என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். 

இளவேனில் ஜீவானந்தத்திடம் "கௌதம் உங்க மனைவியை கொலை செய்தவனை பழிவாங்க போகிறேன் என கிளப்பி விட்டான்" என சொல்கிறாள். ஜீவானந்தம் அவனை யார் இந்த தேவையில்லாத வேலையை செய்ய சொன்னது என திட்டுகிறார். போன் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளான். "இதுல நீங்க தலை இடாதீங்கன்னு நான் தான் அன்னைக்கே சொன்னேன் இல்லையா" என்கிறார் ஜீவானந்தம். கெளதம் வந்தால் தகவல் சொல்ல சொல்கிறார். 

Ethirneechal : வெண்பாவுடன் வீட்டுக்கு வந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரி.. ஒட்டுக்கேட்ட கரிகாலன்.. நேற்றைய எதிர்நீச்சல்
வெண்பாவுடன் அனைவரும் கிச்சனில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை ஒட்டுக்கேட்கிறான் கரிகாலன். அவனை ரேணுகா விரட்டி விடுகிறாள். அப்போது தாராவும், ஐஸ்வர்யாவும் ஸ்கூலில் இருந்து வருகிறார்கள். அனைவரும் ஒன்றாக பேசி சிரித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறான்  கரிகாலன். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
Embed widget