Ethirneechal Janani: ’இந்தாம்மா ஏய்’ .. லிப் கிஸ் கொடுக்கும் எதிர்நீச்சல் ஜனனி.. ஷாக்கான ரசிகர்கள்..!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகை லிப் கிஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகை லிப் கிஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சின்னத்திரை சீரியலகளுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் வயது வித்தியாசம் இல்லாமல் உள்ளது. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பல ஆண்டுகள் கழித்து மறுஒளிபரப்பு செய்தாலும் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இப்படியான நிலையில் கோலங்கள் தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநர் திருச்செல்வம் நீண்ட இடைவெளிக்குப் பின் சன் டிவியில் ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியலை இயக்கி வருகிறார்.
இந்த சீரியலில் நடிகைகள் மதுமிதா, கனிகா, தேவதர்ஷினி, ஹரிப்பிரியா, சத்ய பிரியா, இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் யாரும் அசைக்க முடியாத சாதனைப் படைத்த எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார்.
இவர் இதற்கு முன்பு சில தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானார். அதில் ஒரு சீரியலில் சக நடிகரோடு உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜனனி இப்படியெல்லாமா நடிச்சி இருக்காங்க என கேள்வியெழுப்பி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த மதுமிதாவுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. அப்பாவின் நண்பர்கள் தெரிவித்ததால் தான் நடிக்கவே ஒப்புக் கொண்டு முயற்சி எடுத்தார். பல ஆடிஷன்களில் கலந்து கொண்ட அவருக்கு ஒரு கட்டத்தில் இவருக்கு தெலுங்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன்மூலம் எதிர்நீச்சல் சீரியலிலும் வாய்ப்பு கிடைக்க, தமிழே தெரியாமல் நடிக்க வந்த மதுமிதா இன்று ரசிகர்களிடன் ஃபேவரைட் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Telugu serials baga improve autunai masteruuu 😜 pic.twitter.com/pSy0wTRqUi
— Tom (@Hodophile1322) June 18, 2023