Ethir Neechal July 24 Promo: ஜனனியை வைத்து சொத்தை மீட்பேன்...சவால் விட்ட குணசேகரன்... இன்றைய எதிர் நீச்சல் அப்டேட்!
* ஜீவனந்தத்திற்கு முடிவு கட்ட ஆடிட்டர் சொன்ன யோசனை* சவால் விடும் குணசேகரன்* இடிந்து போய் வீட்டுக்கு வரும் அண்ணன் தம்பிகளை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் பரிதாபம்இன்றைய எதிர் நீச்சல் ப்ரோமோ
சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலாக விளங்கி வரும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் கோபத்தின் உச்சத்தில் இருந்த குணசேகரன், ஜீவானந்தம் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும் என போலீஸ் ஸ்டேஷன் செல்ல சொல்கிறார். ஆடிட்டர் “இப்போது செல்ல வேண்டாம், எல்லா ஆதாரங்களை தயார் செய்து விட்டு பின்னர் தான் செல்ல முடியும். ஜீவானந்தம் அனைத்து ஆதாரங்களையும் தனக்கு சாதகமாக பக்காவாக தயார் செய்து வைத்துள்ளான்” என சொல்கிறார். ஆடிட்டர் சொல்வதை யாரும் கேட்காமல் போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார்கள்.
குணசேகரன் செல்வதற்கு முன்னரே ஜீவானந்தம் மற்றும் ஃபர்ஹானா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துக் கொண்டு இருக்கின்றனர். குணசேகரன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்களின் கம்பெனியில் வந்த தகராறு செய்தார்கள் என்றும் புகார் அளித்துள்ளார். இதைப் பார்த்த குணசேகரன், “பாதி தான் இருக்கு மீதி எங்கே?” எனக் கேட்கிறார். இன்ஸ்பெக்டர் குணசேகரனை திட்டுகிறார்.
“ஒரு பெரிய மனுஷனா இருந்து கொண்டு ஏன் இப்படி செய்கிறீர்கள்?” எனக் கேட்கிறார். "என்னிடம் மன்னிப்பு கேட்டால் நான் புகாரை வாபஸ் வாங்கி கொள்கிறேன். இல்லையென்றால் இந்தப் புகாரை நீங்கள் எடுத்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் நான் கமிஷனர் வரை செல்வேன்” என ஜீவானந்தம் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.நொந்து போன குணசேகரன் சட்டயை எல்லாம் கழட்டி விட்டு காரில் ஏறி செல்கிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்த ஜனனியும் சக்தியும் நடந்த எல்லாவற்றையும் பற்றி வீட்டில் உள்ளவர்களின் சொல்கிறார்கள். “ஜீவானந்தம் மிகவும் மோசமான ஆளாக இருக்கிறான். அப்பத்தா ஏன் அவனை நம்ப வேண்டுமென புரியவில்லை. அவங்க எழுந்து வந்து உண்மையை சொன்னால் மட்டுமே இதை சரி செய்ய முடியும். 40% மொத்தமும் போச்சு. அந்த கௌதம், ஜீவானந்தம் ஆள். அவனிடம் போட்டோவை காட்டி கேட்கும் போது கூட இதை பற்றி அவன் எதுவும் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் கொஞ்சம் இதை தடுத்து இருக்கலாம்” என்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் கோயில் வாசலில் குணசேகரன், கதிர், ஞானம் இடிந்து போய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் ஆடிட்டர் இந்த பிரச்சனையில் இருந்து உடனே வெளியில் வர ஒரு யோசனையை சொல்கிறார். “அவனுக்கு இப்பவே ஒரு முடிவு கட்டணும்னா அது உங்க வீட்டு பொம்பளைங்கலால் தான் முடியும்” என்கிறார். அதற்கு உடனே குணசேகரன் "ஜனனியால் போன சொத்து, ஜனனியாலே திரும்பி வரப்போகுது பார். நான் இதை நடத்தி காட்டுறேனா இல்லையானு பாரு" என்கிறார்.
மறுபக்கம் ஜனனி, அப்பத்தாவின் ரூமுக்கு சென்று அவரிடம் உட்கார்ந்து கதறி கதறி அழுகிறாள். “அந்த ஜீவானந்தம் நம்மை ஏமாற்றி விட்டான் அப்பத்தா. நாம மொத்தமா தோத்து போய்விட்டோம் அப்பத்தா” எனக் கதறுகிறாள். அதைப் பார்த்து சக்தி ஒண்ணுமே புரியாமல் நிற்கிறான்.
குணசேகரனும் மற்றவர்களும் வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டின் பொம்பிளைகள் அனைவரும் வாசலில் நின்று அவர்கள் வருவதைப் பார்க்கிறார்கள். உடைந்து போய் வீட்டுக்குள் நுழைகிறார் குணசேகரன். கை தாங்கலாக குணசேகரனை கதிரும் ஞானமும் அழைத்து வருகிறார்கள். இது தான் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ!