
Ethir neechal July 19: பரபரப்பின் உச்சக்கட்டம்... குணசேகரன் மொத்த சொத்தையும் ஆட்டையைப் போட்ட ஜீவானந்தம்... இன்றைய எதிர் நீச்சல் எபிசோட்!
* சொத்து மொத்தமும் கையை விட்டு போன விஷயத்தை குணசேகரனினிடம் ஆடிட்டர் சொல்ல அனைவருக்கும் ஷாக். * கோபத்தில் கொந்தளிக்கும் ஜனனி இன்றைய எதிர்நீச்சல் எபிசோடின் ப்ரோமோ வெளியானது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் நேற்றைய எபிசோடில் தர்ஷினிக்கு என்றுமே துணையாக இருப்பேன் என தன்னம்பிக்கை கொடுக்கிறாள் ஈஸ்வரி. யாருடைய உதவியையோ அல்லது பரிதாபத்தையோ எதிர்பார்க்காத ஐஸ்வர்யா, அம்மாவுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக நிற்கிறாள். பள்ளியில் டீச்சரை பொய் சொல்லி எப்படியோ சமாளித்த கதையை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்கிறாள் தாரா. அவள் சொன்ன பொய் போலவே உண்மையில் யாராவது கதிரின் கை கால்களை முறிந்தால் அவர்களுக்கு கோயில் கட்டுவேன் என எரிச்சலாக சொல்கிறாள் நந்தினி.
“ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக கல்வெட்டை நமது முன்னோர்கள் வைத்து போல ஒரு மனிதன் எப்படி எல்லாம் வாழக்கூடாது என்பதற்காக இவருக்கு கல்வெட்டு வைத்து பார்ப்பவர்களை காரி துப்ப வைக்கணும்” என கோபத்தின் உச்சத்தில் கொந்தளிக்கிறாள். “நாளை பட்டம்மாள் 40% ஷேருக்கான முடிவு தெரியவரும் ஆனால் அது உங்களுக்கு சாதகமாக இருக்குமா எனத் தெரியவில்லை” என கூறி குணசேகரனை குழப்பினார் ஆடிட்டர். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதற்கான பரபரப்பான ஹிண்ட் தற்போது வெளியாகியுள்ளது. ஆடிட்டர் குணசேகரனை சந்தித்து 'சொத்து மொத்தமும் போச்சு' என்கிறார் அதை கேட்ட குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் அதிர்ச்சி அடைகிறார்கள்.
“சொத்து மொத்தமும் போச்சா? கவர்மெண்ட்ல சீல் வைச்சுட்டாங்களா சார்?" எனக் கேட்கிறார் குணசேகரன். "இல்ல சார் ஜீவானந்தம் என ஒரு ஆளு அவர் பேருல தான் மாறியிருக்கு" என்கிறார். அதைக் கேட்ட அனைவரும் முகத்திலும் பேரதிர்ச்சி. அப்பத்தாவின் ஷேர் பறிபோன தகவல் தெரிந்த ஜனனி கொந்தளிக்கிறாள். "குணசேகரனால ஜெயிக்கவே முடியாது. இதுக்கு எல்லாம் ஒரு முடிவு தெரிய வேண்டும். இன்னைக்கு அந்த ஆளா இல்ல நானா என பார்க்கப் போகிறேன்" எனக் கோபத்தின் உச்சத்தில் கத்துகிறாள்.
இன்றைய இந்த பரபரப்பான கட்டத்துக்காக தான் பல நாட்களாக எதிர்நீச்சல் தீவிர ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தனர். ஜீவானந்தம் ஆட்டம் இனி தான் தொடங்கப்போகிறது, பதுங்கி இருந்த புலி நேரடியாகப் பாய்வதற்கு தான் இத்தனை நாட்களாக காத்துக் கொண்டு இருந்தது.
ஜனனிக்கு குணசேகரனுக்கும் இடையில் காரசாரமான போர் தொடங்க உள்ளது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் பன்மடங்காக பெருகியுள்ளது. இந்த பரபரப்பான கட்டம் மீண்டும் எதிர் நீச்சல் தொடரின் டி.ஆர்.பி ரேட்டிங்கையும் தெறிக்க விடப் போகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

