மேலும் அறிய

Ethirneechal June 30 : ஆதிரையை கொடுமைப்படுத்தும் ஜான்சி ராணி.. குணசேகரனின் கொடூர ப்ளான்.. எதிர்நீச்சல் அப்டேட்

ஜனனிக்கு வந்த சந்தோஷமான செய்தி, குணசேகரனின் அடுத்த திட்டம், ஆதிரை வந்த அடுத்த சோதனை, நடுரோட்டில் நிற்கும் ஜனனி சக்தி... நேற்றைய எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடந்தது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக மிகவும் ஸ்வாரஸ்யமான கதைக்களத்துடன்  ஏகப்பட்ட திருப்பங்களுடன் மிகவும் சஸ்பென்ஸாக ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் ஜனனியும், சக்தியும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 

Ethirneechal June 30 : ஆதிரையை கொடுமைப்படுத்தும் ஜான்சி ராணி.. குணசேகரனின் கொடூர ப்ளான்.. எதிர்நீச்சல் அப்டேட்

சக்தி ஜனனியிடம் முழு நம்பிக்கையுடன் "நான் உன்னுடன் என்றுமே இருப்பேன். நீ சாதிக்க நினைப்பது உன்னுடைய கனவு மட்டுமல்ல உனது அப்பாவின் கனவு. அதை நீ சாதிக்க நிச்சயம் நான் உனக்கு சப்போர்ட்டாக இருப்பேன். நீ தோற்றுப்போனதாக சொல்லி உன்னை காலில் விழச்சொன்ன என் அண்ணன் முன்னாடி நீ ஜெயித்துக்காட்ட வேண்டும்" என்கிறான் . அதற்கு ஜனனி "மற்றவர்களுக்காக அல்ல நமக்காக நாம் நிச்சயம் ஜெயிப்போம்" என்கிறாள். உடனே ஜனனிக்கு ஃபோன் வருகிறது. அதில் அவர்களின் லோன் பணத்தின் முதல் தவணையை அக்கவுண்டில் செலுத்திவிட்டாதாக கூறியதை கேட்டு இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். இருவரும் பேங்க் செல்கிறார்கள். 

ஈஸ்வரி, நந்தினி மற்றும் ரேணுகா மூவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ”அப்பத்தா சொன்னதற்காக தான் ஜனனி  மறுபடியும் இந்த வீட்டுக்கு வந்தாள். இப்போ அதுவும் படுத்துடுச்சு, ஜனனி நிலமையும் இப்படி ஆகிவிட்டது. ஜனனி இந்த ஆதிரை கல்யாணத்திற்காக இப்படி பாடுபடாமல் ஜீவானந்தத்தை தேடி போயிருந்தாலாவது 40% ஷேருக்கு ஏதாவது ஒரு வழி கிடைத்து இருக்கும்” என புலம்புகிறார்கள். "ஜனனிக்கு இப்போ போன் செய்து குழப்ப வேண்டாம். அவளே சரியான பிறகு நமக்கு போன் செய்வாள்" என்கிறாள் ஈஸ்வரி. 

அந்த நேரம் பார்த்து கதிர் அங்கு வந்து மிரட்டுகிறார். ஈஸ்வரி கதிரை நாகரீகமாக பேச சொல்கிறாள். "அவ என்னோட பொண்டாட்டி அவளை நான் எப்படி வேண்டுமாலும் பேசுவேன்" என்கிறான். "பெண்களை கேவலமா பேசுறதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஆதிரை விருப்பமில்லாத கல்யாணத்தை செய்து வைப்பது சட்டப்படி தப்பு. இதில் எங்க தப்பு எதுவும் இல்லை" என்கிறாள் ஈஸ்வரி. அங்கு வரும் குணசேகரன் "இந்த கல்யாணத்தால் நடந்த பிரச்சனைகளுக்கு பிறகும் உங்களை சரளமாக வீட்டில் தங்க வைத்து இருப்பதற்காக என்னை இளக்காரமாக நினைக்காதீர்கள்" என்கிறார். "வேற மாதிரி நடக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால் நீங்கள் இப்படி விட்டுவிட்டீர்கள்" என்கிறான் கதிர்.

குணசேகரன் "அதற்கு நான் வேற கணக்கு போடுகிறேன். உங்களுக்கு அது புரியாது கொஞ்சம் அமைதியாக இருங்கள்" என்கிறார் குணசேகரன். ”இதுவரையில் நாம தான் ஜெயித்தோம் இனிமேலும் நாம் தான் ஜெயிப்போம்” என்கிறார் குணசேகரன்.

Ethirneechal June 30 : ஆதிரையை கொடுமைப்படுத்தும் ஜான்சி ராணி.. குணசேகரனின் கொடூர ப்ளான்.. எதிர்நீச்சல் அப்டேட்
ஜான்சி வீட்டில் சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு நேரமாக உன்னை கெஞ்சி கொண்டே இருப்பது என ஆதிரையை மிரட்டுகிறார் ஜான்சி. கரிகாலன் ஆதிரைக்கு ஆதரவாக பேசுகிறான். எதுவும் சாப்பிடாம இருக்கியே இந்த ஜூஸ் குடி என கொடுக்கிறான். எனக்கு கொஞ்சம் விஷம் இருந்தா கொடு என ஆதிரை கரிகாலனிடம் கேட்கிறாள். "நீ சாகவேண்டும் என்றாலும் என்கிட்ட தான் அனுமதி கேட்கணும்" என ஜான்சி சொல்கிறாள். இது தான் உன் வீடு நாங்க சொல்றதுபோலத்தான் நீ கேட்டு நடக்கணும் என மிரட்டி விட்டு போகிறாள்.

நந்தினி, கரிகாலனுக்கு போன் செய்து ஆதிரையிடம் கொடுக்க சொல்கிறாள். ஆனால் ஆதிரை பேசாமல் போனை தூக்கி போடுகிறாள். மறுபடியும் நந்தினி அழைக்கிறாள் ஆனால் ஆதிரை இனிமேல் எனக்கும் அவர்களும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் இனிமேல் கூப்பிட வேண்டாம் என சொல்கிறாள். நந்தினி வருத்தப்பட்டு பேசுகிறாள். அதற்கு ரேணுகா "அவள் நம்மை போல அல்ல, குணசேகரன் தங்கச்சிதானே அப்படி தான் இருப்பாள். அவளுக்கு நம்ம மேல உண்மையான பாசம் எல்லாம் இல்லை. அருணுடன் சேர்த்து வைக்க வேண்டும் என நம்மோடு இருந்தாள்" என்கிறாள். 

சக்தி ஒரு நாள் இரவு தங்குவதற்காக ஹோட்டலில் ரூம் தேடுகிறான். அவர்கள் கையில் பணம் கம்மியாக இருப்பதால் என்ன செய்வது என குழம்பிப்போய் இருக்கும் சமயத்தில் அங்கே ஜனனியின் ப்ரெண்ட் வந்து "பக்கத்தில் தான் என்னுடைய வீடு இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் இரவு எங்க வீட்டில் தங்கி விட்டு நாளைக்கு மூணு பேரும் சேர்ந்து வீடு பார்க்கலாம்" என சொல்லி அழைத்து செல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.   

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget