Ethir neechal Serial: சரியாக பேசும் கரிகாலன்.. ரேணுகாவுக்கு ஜனனி சொன்ன குட் நியூஸ்.. எதிர்நீச்சல் சீரியலில் இதுவரை..!
Ethir neechal August 8 Episode :* குணசேகரன் பிளானை புட்டு புட்டு வைத்த கரிகாலன்* ரேணுகாவுக்கு ஜனனி கொடுத்த சர்ப்ரைஸ்* ஆடிட்டருடன் வந்த வக்கீல் சொன்ன பகீர் நியூஸ்நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கரிகாலன் குணசேகரனிடம் "மாமா எனக்கு ஒரு டவுட். உங்களுக்கு கை இப்படி ஆயிடுச்சேன்னு நெட்ல எல்லாம் தேடி பார்த்ததில் பொம்பளை ஆட்களுக்கு கை இழுத்துக்குச்சுனா ரைட் கை விளங்காம போகும் அதுவே ஆம்பளைங்களுக்கு கை இழுத்துக்குச்சுனா லெஃப்ட் கை விளங்காம போகும் அப்படினு படிச்சேன். ஆனா உங்களுக்கு எப்படி சொத்து கை விளங்காம போச்சு" அப்படினு கேட்கவும் குணசேரனுக்கும் கதிருக்கும் பக்குனு இருக்கு. "உனக்கு பொண்ணும் கொடுத்து வீட்டுல இடமும் குடுத்து வைச்சு இருக்கேன். வாயை மூடிட்டு அமைதியா இரு" என்கிறார் குணசேகரன்.
புலம்பும் கரிகாலன் :
எங்க வீட்டுல இருந்தா நல்லா சாப்பிட்டு நிம்மதியா இருந்தேன். ஆதிரையை கல்யாணம் செய்ததில் இருந்து என்னோட வாழ்க்கையே போய்விட்டது என்றும் புலம்பி கொண்டு இருக்கிறான். "இவன் காமெடியா பேசுறேன் என்ற பெயரில் வெட்டு வைச்சுட்டு போய்டுவான். இவனை நம்பக்கூடாது" என்கிறார் குணசேகரன்.
கிள்ளிவளவன் சொன்ன தகவல் :
அந்த நேரத்தில் கதிருக்கு கிள்ளிவளவன் புதிய நம்பரில் இருந்து போன் செய்கிறார். பசங்க கிட்ட பேசி ரெடியாக சொல்லிட்டேன். ஜீவானந்தம் பற்றின விஷயங்களை சேகரிக்க சொல்லி இருக்கேன். விரைவில் நாங்கள் அங்கு வந்துவிடுவோம். நானும் அடிக்கடி போன் செய்யமாட்டேன் நீங்களும் எனக்கு செய்யாதீங்க என சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறார். கதிர் மறைமுகமாக இந்த தகவலை குணசேகரனிடம் சொல்கிறான்.
ரேணுகாவுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் :
இரவு கரிகாலன், கதிர் மற்றும் ஞானத்திற்கும் கதை கதையாக சுத்துகிறான். நந்தினி வழக்கம் போல சமையலறையில் இருந்து கமெண்ட் கொடுத்து கொண்டே இருக்கிறாள். அந்த நேரத்தில் ஜனனி ஜன்னல் வழியாக வந்து அக்கா நான் விஷயம் சொல்லணும் என சொல்கிறாள். அந்த நேரம் பார்த்து கரிகாலன் அங்கே வந்து "எனக்கு ஜூஸ் போட்டு குடு நந்தினி அக்கா" என உள்ளே வரவும் ஜனனி சென்று ஒளிந்து கொள்கிறாள்.
ஜனனி சொன்ன குட் நியூஸ் :
பிறகு அனைவரும் உள்ளே சென்றதும் ஜனனி வந்து அனைவரையும் சுவாமி படத்திற்கு முன்னர் அழைத்து சென்று ரேணுகாவிடம் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ஒன்றை கொடுக்கிறாள். சீதா கல்யாண ராமன் அவர்களுடைய டான்ஸ் ஸ்கூலில் உங்களை டான்ஸ் டீச்சரா அப்பாய்ண்ட் பண்ணி இருக்காங்க. உங்க வீடியோவை அவங்களுக்கு அனுப்பி வைச்சேன் உடனே அப்பாய்ண்ட் லெட்டர் அனுப்பிட்டாங்க என்றதும் அனைவருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.
அடுத்த நாள் காலை சக்தி ஜனனிக்கு போன் செய்து "இன்னும் கொஞ்ச நேரத்தில் கவுஞ்சி சென்று விடுவேன். இதுவரைக்கும் விசாரிச்சா இடத்தில் எந்த தகவலும் கிடைக்கல. அப்படி கிடைச்சா உடனே உனக்கு தகவல் சொல்றேன்" என்கிறான். ஜனனியும் சக்தியை பத்திரமாக இருக்க சொல்கிறாள்.
புதிதாக வக்கீல் என்ட்ரி :
அந்த நேரத்தில் ஆடிட்டர் ஒரு வக்கீல் உடன் குணசேகரன் வீட்டுக்கு வருகிறார். அனைவரும் ஒன்று கூடி ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆடிட்டர் புதிதாக என்ன பிரச்சினையை கொண்டு வந்து இருக்கிறார் என புரியவில்லையே என புலம்பி கொண்டு இருக்கிறார்கள் நந்தினியும், ரேணுகாவும். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.