மேலும் அறிய

சிவன் சனியின் சூழ்ச்சியை முறியடிப்பாரா? கார்த்திகேயன் சனியின் பிடியிலிருந்து விடுபடுவாரா? சிவசக்தி திருவிளையாடலில் இந்த வாரம்

சிவன் சனியின் சூழ்ச்சியை முறியடிப்பாரா? கார்த்திகேயன் சனியின் பிடியிலிருந்து விடுபடுவாரா? அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் இந்த வாரக் கதை நகர்கிறது.

சிவசக்தி திருவிளையாடல்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது… `சிவசக்தி திருவிளையாடல்` ஆன்மிகப் புராண தொடர். எல்லோரின் அமோக ஆதரவுடன் வெற்றித் தொடராக ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த வாரம் –

சனியின் பிடியில் சிக்கும் சிவ-பார்வதி குடும்பம்

அபஸ்மாரன் பார்வதிதேவியின் நினைவுகளை அழிக்கிறான். அதன் பிறகு, மக்களின் நினைவுகளை குழப்பி பிரபஞ்சத்தில் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறான். அபஸ்மரனை அழிக்க நினைக்கும் கார்த்திகேயனும் அவன் பிடியில் சிக்குகிறார். கார்த்திகேயன் உள்பட தேவர்கள் அனைவரும் அசுர அரசன் சும்பனுக்கு துதிபாடத் தொடங்குகிறார்கள். மொத்த அசுர குலமும் குதுகலிக்கிறது.   அபஸ்மரனை அடக்க, சிவன்  நடராஜர் அவதாரம் எடுக்கிறார்.  அபஸ்மரனை அழித்தால், பிரபஞ்சம் சமநிலை இழக்கும் அபாயம் இருக்கிறது. அதனால் அபஸ்மரனை அழிக்காமல் தான் காலுக்கு அடியில் அழுத்தி வைக்கிறார் நடராஜர்.

அபஸ்மரனை நடராஜரிடம் இருந்து விடுதலை செய்ய, அசுர குரு சுக்ராச்சாரியார் யோசனை அளிக்கிறார். அதன் படி அறுபதாயிரம் சூர்யா புத்திரர்களின் அஸ்தியைக் கொண்டு ஆயுதம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று சொல்கிறார் சுக்ராச்சாரியார். எப்படி இது சாத்தியம் என்று சும்பன் கேட்க, சுக்ராச்சாரியார் ஏற்கனவே அறுபதாயிரம் அஸ்தி தயாராக உள்ளது. அதை எடுத்து வந்தால் போதும் என்று அது பற்றி விளக்குகிறார்.

முன்னொரு காலத்தில்சூர்ய குலத்தைச் சேர்ந்த மன்னன் சாகரன் அஸ்வமேத யாகம் செய்தான். அவன் குதிரை சொர்கத்தையும் கடக்கும் என இந்திரன் அஞ்சினான். அதனால் சூழ்ச்சி செய்து அந்த குதிரையை கபில முனியின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தான். குதிரையைத் தேடிச் சென்ற, சாகரனின்  அறுபதாயிரம் புத்திரர்கள் தவத்தில் இருக்கும் கபில முனிதான் இந்த வேலையைச் செய்தது என்று தவறாக நினைத்தார்கள். அவரின் தவத்தினைக் கலைத்தார்கள். கடும் கோபம் கொண்ட முனி அறுபதாயிரம் புத்திரர்களையும் சாபத்தினால் எரித்துவிட்டார்.  இந்திரனின் சுழ்ச்சியால் கபில முனியின் கோபத்தில் சாம்பலானார்கள் அறுபதாயிரம் சூர்ய புத்திரர்கள். அந்த அஸ்தி இன்னும் உள்ளது. அதன் மூலம் தான் ஆயுதம் தயாரிக்க திட்டமிட வேண்டும் என்கிறார்.

மறுபுறம் சூர்ய குலத்தைச் சேர்ந்த பகீரதன் தன் முன்னோர்கள் அறுபதாயிரம் பேருக்கும் மோட்சம் கிடைக்க பிரம்மதேவரை நோக்கி தவம் இருக்கிறார். மும்மூர்த்திகள் அசுரர்களின் சூழ்ச்சியை முறியடிக்க திட்டமிடுகிறார்கள். பிரம்ம தேவர் பகீரதனுக்கு வரம் கொடுக்க முடிவுசெய்கிறார். அதன்படி, பிரம்மனின் கமண்டலத்தில் இருந்து கங்கையை பூமிக்கு அனுப்பி அறுபதாயிரம் சூர்ய புத்திரர்களின் அஸ்திக்கும் பாவ விமோசனம் அளிக்கும்படி பகீரதன் கேட்கிறார். பிரம்மா தயங்குகிறார்.

பகீரதன் ஏன் வரம் தர மறுக்கிறீர்கள் என்று கேட்கிறார். அப்போது பிரம்மா கங்கையின் வேகத்தை பூமியால் தாங்க முடியாது என்றுரைகிறார். அப்போது சிவன் தன் ஜடாமுடியால் தான் கங்கையை தாங்குவதாக கூறி பிரம்மாவை வரம் தரச் சொல்கிறார். கங்கை பூமிக்கு வந்து அசுரர்களின் திட்டத்தினை முறியடிக்கிறார்.

சிவன் பார்வதியை அழிக்க இருந்த அணைத்து மார்க்கமும் அடைக்கப்படுகிறது. அதனால் அசுர மாதா திதி, சூர்யா புத்திரனான சனி தேவனை நாடுகிறார். அசுர மாத திதியின் சூழ்ச்சியால் சனிபகவான் சிவன் பார்வதியின் குடுபத்திற்கு எதிராக திரும்புகிறார். கார்த்திகேயனை சனியின் பிடியில் சிக்கவைத்து, கார்த்திகேயனை சிவனுக்கு எதிராக திருப்புகிறார். இதனால் கைலாயத்தில் பிரச்னை உருவாகிறது. சிவன் சனியின் சூழ்ச்சியை முறியடிப்பாரா? கார்த்திகேயன் சனியின் பிடியிலிருந்து விடுபடுவாரா? அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் இந்த வாரக் கதை நகர்கிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பகும்

`சிவசக்தி திருவிளையாடல்` தொடரில் காணத் தவறாதீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Embed widget