Baakiyalakshmi August 25 episode: தப்பான ரூட்டில் செல்லும் செழியன்.. கண்கலங்கும் ஜெனி.. பாக்கியலட்சுமியில் இன்று
Baakiyalakshmi August 25 : ஜெனியின் வளைகாப்பு விழா இன்று பாக்கியலட்சுமி எபிசோடில் களைகட்டுகிறது. செழியன் செய்யும் காரியம் அனைவரையும் எரிச்சலடைய செய்கிறது. இன்று பாக்கியலட்சுமியில் என்ன நடக்கிறது?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) தொடரின் இன்றைய எபிசோடில் ஜெனியின் வளைகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மும்மரமாக களைகட்டுகிறது. செழியன் ஏதோ வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளான். ஆனால் அவனை காணவில்லையே என ஈஸ்வரி தேடுகிறார். நான் கூட எங்கயும் போகாமல், போகாத ஜெனி.. போகாத ஜெனி.. என அழுது கொண்டு இருப்பான் என நினைத்தேன்.. என எழில் செழியனை கிண்டல் செய்கிறான்.
ஈஸ்வரி உனக்கு அந்த நிலைமை வரும்போது தெரியும் என எழிலிடம் சொல்கிறார். அதை கேட்டதையும் அமிர்தாவின் முகம் சுருங்கிப்போக பாக்கியா அதை புரிந்துகொண்டு அமிர்தாவை ஒரு வேலை சொல்லி உள்ளே அனுப்பி விடுகிறாள். செல்வியிடம் ஏன் குழந்தைகளை அழைத்து வரவில்லை என பாக்கியா கேட்கிறாள். அந்த நேரத்தில் ஜெனியின் அம்மா உறவினர்களோடும் சீர்வரிசையோடும் வருகிறார். அவரை வரவேற்று அனைவரும் நலம் விசாரிக்கிறார்கள். பழனிசாமியும் அவருடைய அம்மாவும் வருகிறார்கள். அவர்களை ஜெனியின் அம்மாவிடம் அறிமுகம் செய்து வைக்கிறாள் பாக்கியா. அது யார் என எழில் மூலம் தெரிந்துகொள்கிறார் ஜெனியின் அம்மா.
வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்க செழியன் போனையே பார்த்து லேடி கிளைன்ட் மாலினிக்கு சிரித்துக்கொண்டே மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருக்கிறான். ஆபிஸ் லீவ் அன்னிக்கு கூட உன்னை விடமாட்டாங்களா என எழில் செழியனை திட்டுகிறான். ஜெனியை அலங்காரம் செய்து மாடியில் இருந்து அழைத்து வருகிறார்கள். அதையும் பொருட்படுத்தாமல் செழியன் போனையே பார்த்துக்கொண்டு இருந்ததால் ஈஸ்வரியும் திட்டுகிறார்.
ஜெனி வந்ததும் ஒவ்வொருவராக நலங்கு வைக்கிறார்கள். அப்போது கரெக்ட்டா பழனிச்சாமி நலங்கு வைக்கும்போது அழையா விருந்தாளியாக கோபி, ராதிகா மற்றும் மயூ வருகிறார்கள். பழனிச்சாமியை பார்த்ததும் கடுப்பாகிறார் கோபி. இந்த லேம்ப் போஸ்ட் இங்கேயே செட்டிலாகிவிட்டனா? என புலம்புகிறார்.
ராதிகா கோபியிடம் அவங்க என்ன பண்ணறாங்க என்பதை பார்த்துக்கொண்டு இருக்காதீங்க என கோபியை திட்டுகிறாள் ராதிகா. வாங்கண்ணா வாங்க என பழனிச்சாமி கோபியை வரவேற்கிறார். கோபியும் ராதிகாவும் ஜெனிக்கு நலங்கு வைக்க, பாக்கியா முகம் வாடிப்போகிறது.
மயூவை பாக்கியா ரகசியமாக நலம் விசாரிக்கிறாள்.
அப்போதும் செழியன் போனையே பார்த்து கொண்டு இருப்பதால் பாக்கியா அவனை திட்டுகிறாள். நலங்கு வைத்து முடித்ததும் அனைவரும் சாப்பிட செல்கிறார்கள். அந்த சமயத்தில் ஜெனி இங்கிருந்து கிளம்பப்போவதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறாள். அவளை அனைவரும் சமாதானம் செய்கிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.