மேலும் அறிய

Baakiyalakshmi August 11: இது என்ன புது ட்ராமாவா இருக்கு... பல்டி அடித்த ஈஸ்வரி... கெத்தாக பேசி மொக்கை வாங்கிய கோபி... பாக்யலட்சுமியில் இன்று! 

* பழனிச்சாமி ஐடியா கொடுத்ததற்கு நன்றி சொன்ன பாக்கியா* பாக்கியா வீடியோவை பார்த்து டென்ஷனாகும் ராதிகா, கோபி* ஈஸ்வரிக்கு மாறி மாறி ஐஸ் வைக்கும் பாக்கியா மற்றும் எழில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸுக்கு ஸ்வீட்டுடன் வந்து பழனிச்சாமிக்கு கொடுக்கிறாள். “நீங்க கொடுத்த ஐடியா சூப்பரா ஒர்க் அவுட் ஆயிடுச்சு சார். ரொம்ப நன்றி.

அத்தை நான் காலேஜ் போக சம்மதம் சொல்லிட்டாங்க. அது மட்டும் இல்ல அவங்களும் பேட்டியெல்லாம் கொடுத்தாங்க நீங்களும் அதை பாருங்க” என சொல்லி அந்த வீடியோவை பழனிச்சாமியிடம் காண்பிக்கிறாள். அவரும் இந்த வீடியோவை பார்த்து ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.

கடுப்பான ராதிகா :

மறுபக்கம் கேன்டீனில் அமிர்தா வந்து பாக்கியா பேசிய வீடியோவை செல்விக்கும் வேலை செய்யும் மற்ற பெண்களுக்கும் காண்பிக்கிறாள். அவர்களும் அதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். அந்த நேரம் ராதிகா அங்கே வந்து இவர்கள் எல்லாரும் ஒன்றாக சிரித்து பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து வழக்கம் போல சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறாள். 

"வேலை நேரத்துல என்ன பேச்சு வேண்டி கிடக்கு. இப்ப எல்லாரும் சாப்பிட வருவாங்க போய் வேலையை பாருங்க" என சொல்லி அனுப்புகிறாள். செல்வி சும்மா இருக்காமல் "எங்களோட முதலாளி அம்மா வீடியோவை பாருங்க" என சொல்லி பாக்கியாவோட வீடியோவை காட்டி வெறுப்பேத்துகிறாள். "மருமகள் மாமியாரை பாராட்டுறதும் மாமியார் மருமகளை பாராட்டுறதும்" என சொன்னதும் ராதிகா கடுப்பாகிறாள். 

Baakiyalakshmi August 11: இது என்ன புது ட்ராமாவா இருக்கு... பல்டி அடித்த ஈஸ்வரி... கெத்தாக பேசி மொக்கை வாங்கிய கோபி... பாக்யலட்சுமியில் இன்று! 

அம்மாவும் மகனும் மாறி மாறி ஐஸ் :

பாக்கியா காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரியிடம் சென்று  "இன்னைக்கு காலேஜில் என்ன ஆச்சு தெரியுமா?" என சொல்லி ஈஸ்வரி பேசிய வீடியோவை போட்டு காண்பித்ததாக சொல்கிறாள்.

"எல்லாருமே உங்கள பத்தி ரொம்பப் பெருமையை பேசினாங்க. காலேஜே உங்கள பத்தி தான் அத்தை பேசுது" என ஐஸ் வைக்கிறாள். எழிலும் "ஆமா பாட்டி நானும் அம்மாவை காலேஜில் இருந்து கூட்டிட்டு வரதுக்காக போயிருந்தேன். என்னையும் பார்த்து நீங்க தான் ஈஸ்வரி அம்மா பேரனா என கேட்டாங்க" என ரீல் சுத்துகிறான்.

"அதே போல நம்ம ஏரியா அசோசியேஷன் குரூப்ல கூட உங்க வீடியோவை போட்டேன். இப்போ இந்த ஏரியா முழுக்க நீ ரொம்ப பேமஸ் ஆயிட்டிங்க அத்தை" என்கிறாள் பாக்கியா. 

நீங்களும் நானும் கோயிலுக்கு போயிட்டு வரலாம் என்கிறாள் பாக்கியா. ஈஸ்வரி "நான் தியானம் பண்ணனும் அதனால் நான் வரலை" என்கிறார். நீங்க கோயிலுக்கு வந்து கூட தியானம் பண்ணலாம் என சொல்ல ,ஈஸ்வரி சரி என சொல்கிறார். பாக்கியா நான் போய் குளிச்சுட்டு ரெடியாகிட்டு வரேன் என சொல்லி செல்கிறாள்.

Baakiyalakshmi August 11: இது என்ன புது ட்ராமாவா இருக்கு... பல்டி அடித்த ஈஸ்வரி... கெத்தாக பேசி மொக்கை வாங்கிய கோபி... பாக்யலட்சுமியில் இன்று! 

மொக்கை வாங்கிய கோபி :

பாரில் கோபியும் அவரது நண்பனும் தண்ணி அடிச்சுட்டு இருக்காங்க. அப்போ ராதிகா கோபிக்கு, பாக்கியா பேசின இன்டெர்வியூ வீடியோவை அனுப்புகிறாள். அதைப் பார்த்த கோபி "இவ ஏதோ பிளான் பண்ணறா. ஆனா எங்க அம்மா இதுக்கெல்லாம் ஏமாறமாட்டாங்க" என கெத்தாக சொல்கிறான். உடனே ஈஸ்வரி பேசுவதும் வரவே அதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான் கோபி. எங்க அம்மாவும் கட்சி மாறீட்டாங்களா எனப் புலம்புகிறான். டென்ஷனான கோபி நான் வீட்டுக்கு கிளப்புகிறேன் என சொல்லி விட்டு கிளம்புகிறான். 

ஈஸ்வரி கொடுத்த ஷாக் பதில் :

கோயிலுக்கு ஈஸ்வரியும் பாக்கியாவும் வரும் வழியில் அனைவரும் ஈஸ்வரியைப் பாராட்டுகிறார்கள். உடனே ஈஸ்வரி "பாக்கியா நான் காலேஜ் போகவில்லை என்று சொன்னாள், ஆனால் நான் தான் நீ கட்டாயமாக படிக்கணும் என சொன்னேன்" என ஈஸ்வரி சொன்ன நிலையில், அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி தொடர் நிறைவடைந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget