மேலும் அறிய

Amudhavum Annalakshmiyum: அமுதா வைத்த ஆப்பு.. மாயாவை வெளுத்தெடுக்கும் போலீஸ்.. அமுதாவும் அன்னலட்சுமியும் இன்று.!

செந்தில் கோபத்துடன் மாயாவை கத்தியால் குத்தப்போக அமுதா அதைத் தடுத்து நிறுத்துகிறாள். டாக்டர் மாணிக்கத்தின் நிலைமை சீரியசாக இருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் கடந்த வாரம் கொலு பூஜை முடிய மாயா ட்ரெஸ்ஸை கிழித்துக் கொண்டு மாணிக்கத்தின் மீது பிராது கொடுத்த நிலையில், வரும் நாட்களில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மாணிக்கம் மனமுடைந்து இருக்க, அமுதா ஆறுதல் சொல்ல திடீரென மாணிக்கத்திற்கு நெஞ்சு வலி வர அவரை ஆஸ்பிட்டலில் சேர்க்கின்றனர். செந்தில் கோபத்துடன் மாயாவை கத்தியால் குத்தப்போக அமுதா அதைத் தடுத்து நிறுத்துகிறாள். டாக்டர் மாணிக்கத்தின் நிலைமை சீரியசாக இருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு மாணிக்கம் கண் முழித்து அமுதாவிடம் நான் இப்போதைக்கு சாக மாட்டேன் என சொல்கிறார். அமுதாவும் அன்னலட்சுமியும் ஜோசியரை சந்திக்க செந்திலுக்கு ரெண்டு கல்யாண பிராப்தம் இருப்பதாக சொல்லி வாழைமரத்திற்கு தாலியை கட்டி பரிகாரம் செய்ய சொல்கிறார். அன்னலட்சுமி “கோயிலில் பரிகாரம் செய்ய வேண்டும், என்னால முடியாது, அதனால என் மருமக தான் செய்யனும்” என மாயாவை சொல்ல, கோயிலில் அன்னலட்சுமி திடீரென காணாமல் போக , மாயா அன்னலட்சுமியை தேடியபடி நல்லவேளை நான் தப்பிச்சிட்டேன் என மனதிற்குள் எண்ணிக் கொள்கிறாள்.

அடுத்து மாயா அன்னலட்சுமியை தேடி வீட்டுக்கு வர, அமுதா மாயாவிடம் “உன் கூட தான வந்தாங்க, இப்ப இங்க வந்து அத்தையை எங்கன்னு கேக்குற?” என்று கேட்க, செந்தில் எங்க அம்மாவை என்ன பண்ணுன எனக் கேட்டு போலீசை அழைத்து மாயாவை விசாரிக்க சொல்கிறான். போலீஸ் வீட்டுக்கு வர செந்தில் “எங்க அம்மாவை எங்கயோ ஒளிச்சி வச்சிருக்கா எங்க வச்சிருக்கான்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க” என சொல்ல, போலீஸ் மாயாவை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கின்றனர்.

அமுதா மாணிக்கத்திடம் “அத்தை எங்கயும் காணாம போகலை, இங்க தான் இருக்காங்க என சொல்ல அன்னலட்சுமி வர உமா அதை கவனித்து விடுகிறாள். அன்னலட்சுமி ஜோசியக்காரரிடம் சென்று வந்ததை பற்றி சொல்ல, உமா  அதை கேட்டு ஸ்டேஷனுக்கு வந்து வீட்டில் நடந்ததை சொல்லி போலீசிடம் அன்னலட்சுமி வீட்டில் இருப்பதாக சொல்ல, போலீஸ் வீட்டுக்கு வர மாணிக்கம் எங்க அக்கா கிடைச்சிட்டாங்களா என கேக்க, போலீஸ் வீடு முழுவதும் செக் செய்து விட்டு அன்னலட்சுமி இல்லை என சொல்கின்றனர்.

இதனால் போலீஸ் உமாவை திட்டி அவளையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று இருவரையும் அடித்து உண்மையை சொல்லுமாறு விசாரிக்கின்றனர். வீட்டில் வாழைக்கண்ணுக்கு தாலி கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வக்கீல் வந்து உமாவையும் மாயாவையும் பெயிலில் எடுக்க மாயா பஞ்சாயத்தாரை கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வருகிறாள்.

செந்தில் வாழைக்கண்ணுக்கு தாலி கட்ட போகும் சமயம் மாயா பஞ்சாயாசத்து தலைவருடன் வீட்டுக்கு வந்து என்னம்மா பரிகாரம் என்று கேட்க, அன்னலட்சுமி இரண்டு திருமணத்தைப் பற்றி சொல்ல பஞ்சாயத்து தலைவர்  “உண்மையை நிரூபிச்சிட்டு இந்த பரிகாரத்தை பண்ணிக்கோங்க” என சொல்கிறார். “தாலி கட்டுறதா இருந்தா இப்பவே மாயா கழுத்துல கட்டச் சொல்லுங்க” என என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அமுதா மாயாவை அழைத்து விக்னேஷிடம் அவள் பேசிய வீடியோவை காட்டி “பரிகார கல்யாணத்திற்கு சரி என சொல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவேன்” என மிரட்டுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
Boat Ride in Chennai: சென்னையிலேயே இனி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்... எங்கன்னு தெரியுமா.?
சென்னையிலேயே இனி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்... எங்கன்னு தெரியுமா.?
Womens Day 2025 Wishes: உலக மகளிர் தினம் - தாய், தாரம், மகள், தோழிக்கான வாழ்த்து செய்திகள் - ஸ்டேடஸ் என்ன போடலாம்?
Womens Day 2025 Wishes: உலக மகளிர் தினம் - தாய், தாரம், மகள், தோழிக்கான வாழ்த்து செய்திகள் - ஸ்டேடஸ் என்ன போடலாம்?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
Boat Ride in Chennai: சென்னையிலேயே இனி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்... எங்கன்னு தெரியுமா.?
சென்னையிலேயே இனி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்... எங்கன்னு தெரியுமா.?
Womens Day 2025 Wishes: உலக மகளிர் தினம் - தாய், தாரம், மகள், தோழிக்கான வாழ்த்து செய்திகள் - ஸ்டேடஸ் என்ன போடலாம்?
Womens Day 2025 Wishes: உலக மகளிர் தினம் - தாய், தாரம், மகள், தோழிக்கான வாழ்த்து செய்திகள் - ஸ்டேடஸ் என்ன போடலாம்?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா
பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை! 14 வயது தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! வலையத்தில் 4 பேர்!
பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை! 14 வயது தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! வலையத்தில் 4 பேர்!
இனி இது கட்டாயம்! மார்ச் 10 முதல் ஐ.டி ஊழியரகளுக்கு ஷாக் கொடுத்த இன்ஃபோசிஸ்!
இனி இது கட்டாயம்! மார்ச் 10 முதல் ஐ.டி ஊழியரகளுக்கு ஷாக் கொடுத்த இன்ஃபோசிஸ்!
Embed widget