மீண்டும் சன் டிவி சீரியலில் நடிகை ராதிகா… பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்… என்ன சீரியல் அது?
மீண்டும் சன்.டிவி சீரியலில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அது என்ன சீரியல் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பூவே உனக்காக சீரியல் மூலம் பிரபலமான நடிகை ராதிகா ப்ரீத்தி, தற்போது மீண்டும் சன்டிவி சீரியலில் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
நடிகர்கள் சீரியல் மாற்றம்
சின்னத்திரையில் பரபரப்பாக ஓடும் சீரியல் முடிந்துவிட்டால் அடுத்த சில நாட்களில் வேறு ஒரு புதிய சீரியல் ட்ரெண்டிங் அடிக்கும். அப்படி சீரியல்கள் காலத்திற்கு காலம் ஒவ்வொன்று ஹிட் ஆகி பெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டும். அதுபோல முடிந்துவிட்ட சீரியலில் நடித்த சில நட்சத்திரங்கள், அடுத்த ட்ரெண்டிங் சீரியலிலும் லீடு ரோலில் நடிப்பது வழக்கம். அப்போது அந்த நடிகருக்காகவே அந்த சீரியல் மேலும் சூடு பிடிக்க தொடங்கும்.
View this post on Instagram
ஒரே சானலில் வேறு சீரியல்
இது பொதுவாக வேறு ஒரு சானாலுக்கு நடிகர்கள் மாறும்போது நடக்கும் விஷயம். ஆனால் ஒரு சீரியலில் இருந்து பாதியில் விலகிய நடிகை, அதே சேனலில் மற்றொரு சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பது ஆச்சர்யமான விஷயம் தான். ஏனென்றால் ஏற்கனவே விலகும்போது அந்த குறிப்பிட்ட சானாலுடன் மணக்கசப்புடன்தான் பெரும்பாலும் விலகி இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதுபோன்ற ஒரு நிகழ்வு சன் டிவியில் நடந்துள்ளது.
பூவே உனக்காக ராதிகா ப்ரீத்தி
சன்டிவியின் பூவே உனக்காக சீரியலில் இருந்து பாதியில் விலகிய நடிகை ராதிகா ப்ரீத்தி, தற்போது சன்டிவியிலேயே, ஒரு புதிய சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டில் ஒளிபரப்பு தொடங்கப்பட்ட பூவே உனக்காக சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் அறிமுகமான நடிகைதான் ராதிகா ப்ரீத்தி. ராதிகா இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.
View this post on Instagram
வெள்ளித்திரை ஆசை
ஒரு கட்டத்தில் பூவே உனக்காக சீரியலில் இருந்து திடீரென ராதிகா விலகியதால், பல ரசிகர்கள் வருத்தமடைந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூவே உனக்காக சீரியல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இதற்கிடையில், திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகை ராதிகா ப்ரீத்தி. தமிழில் எம்பிரான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ராதிகா ப்ரீத்தி, கன்னட சினிமாவில் சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவரது 'நாதிருதின்னா' திரைப்படம், வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ராதிகா ப்ரீத்தி சின்னத்திரை உலகிற்கு வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
மீண்டும் சின்னத்திரை
மீண்டும் சன்.டிவி சீரியலில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அது என்ன சீரியல் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பூவே உனக்காக சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த அருண் தற்போது, விஜய் டிவியின் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ராதிகா மீண்டும் சன் டி.வி. சீரியலில் நடிக்க உள்ளார். பூவே உனக்காக சீரியல் மூலம் பிரபலமான அவர், தற்போது மீண்டும் சன்டிவி சீரியலில் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்