Watch Video: தும்பிக்கையை இப்படித்தான் யூஸ் பண்ணனும்.... லைக்ஸ் அள்ளும் யானைக்குட்டி..
தன் குட்டித் தும்பிக்கையால் தண்ணீரை குடிக்க முடியாதபோதும் விடாமல் முயற்சிக்கும் யானையின் இந்த க்யூட் செய்கை சிரிப்பை வரவழைத்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
நேரில் பார்க்கும்போதாகட்டும், வீடியோக்களாகட்டும் யானைகளும் அவற்றின் மெதுமெதுவான அசைவுகளும் நமக்கு என்றுமே சலிப்பூட்டுவதே இல்லை.
மண்ணை வாரி இறைப்பது தொடங்கி, குளிப்பது, சரிந்து மலைச்சரிவுகளில் இறங்குவது என யானைகளின் ஒவ்வொரு க்யூட்ட்டான செயலும் இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக யானைக்குட்டி ஒன்று தன் தாய்க்கு அருகில் நின்றபடி தன் குட்டி தும்பிக்கையால் தண்ணீர் குடிக்க முயலும் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தன் குட்டித் தும்பிக்கையால் தண்ணீரை குடிக்க முடியாமலும் எனினும் விடாமல் தண்ணீரை அலசி முயற்சிக்கும் யானையின் இந்த க்யூட் செய்கை சிரிப்பை வரவழைத்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
Just a baby elephant 🐘 learning how to use its trunk 😍💦#worldelephantday pic.twitter.com/knD6PuaheF
— Robert E Fuller (@RobertEFuller) August 12, 2022
இதேபோல் முன்னதாக ஹோட்டல் அறையில் தூங்கும் பெண் ஒருவரை யானை ஒன்று தன் தும்பிக்கையால் எழுப்பிவிடும் காட்சி இணையவாசிகளிடையே ஹிட் அடித்தது.
View this post on Instagram
யானைகளை தேசிய விலங்காகக் கொண்ட யானைகளின் தேசமான தாய்லாந்து நாட்டின் ரிசார்ட் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சாக்ஷி எனும் பெண் பகிர்ந்துள்ளார்.
யானை தன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வீடியோ பகிர்ந்துள்ள சாக்ஷி, இந்த ரிசார்ட்டில் யானைகளுக்கு உணவளித்து, அவற்றுடன் வாக்கிங் சென்று, குளிப்பாட்டி, விளையாடி என அனைத்தும் செய்து மகிழலாம் என்றும் இது மிகவும் புதுவிதமான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாவில் பல மில்லியன்கள் பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ, 34 லட்சம் லைக்குகளையும் பெற்று நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்