![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Parthiban: கதையெல்லாம் பார்ப்பதில்லை; தமன்னா டான்ஸ் இருந்தால் படம் ஹிட்... சர்ச்சையாகும் பார்த்திபனின் கருத்து
இப்போதெல்லாம் கதையை யாரும் பார்ப்பதில்லை தமன்னா டான்ஸ் ஆடினால் அந்த படம் ஹிட் ஆகி விடுகிறது என்ற இயக்குநர் பார்த்திபனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
![Parthiban: கதையெல்லாம் பார்ப்பதில்லை; தமன்னா டான்ஸ் இருந்தால் படம் ஹிட்... சர்ச்சையாகும் பார்த்திபனின் கருத்து teenz director parthibans comments on tamannaah stirs controversy Parthiban: கதையெல்லாம் பார்ப்பதில்லை; தமன்னா டான்ஸ் இருந்தால் படம் ஹிட்... சர்ச்சையாகும் பார்த்திபனின் கருத்து](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/19/7835667644ee011a0a92160181d2746b1721386490839572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பார்த்திபன்
ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதிய முயற்சியை செய்துவருபவர் இயக்குநர் பார்த்திபன். கவிஞர் , கதையாசிரியர் , இயக்குநர் , நடிகர் , தயாரிப்பாளர் என சினிமாவில் கலந்துகட்டி அடித்துவரும் பார்த்திபனின் சமீபத்திய படம் டீன்ஸ். 13 இளம் வயதினரை வைத்து த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வழக்கம்போல தனது ஸ்டைலில் ஒரு மெகா பட்ஜெட் படமான கமலின் இந்தியன் 2 படத்துடன் தனது டீன்ஸ் படத்தை வெளியிட்டார் பார்த்திபன். இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் டீன்ஸ் படத்தில் ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்தது.
பயாஸ்கோப் மற்றும் அகிரா ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது . டி இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜான் போஸ்கோ, பிராங்கின்ஸ்டன், அஸ்மிதா, பி.கிருத்திகா ஐயர், கே.எஸ்.தீபன், சில்வென்ஸ்டன், உதய்பிரியன், பிரஷிதா, ரோஷன், அஸ்மிதா மகாதேவன்மோர், ரஞ்சித் தண்டபாணி, பார்த்திபன் ராதாகிருஷ்ணன், பிஞ்சி சீனிவாசன், பால சுவாமிநாதன், கால்டுவெல் வேல்நம்பிமோர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டீன்ஸ் திரைப்படம் உலகளவில் 90 லட்சம் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டீன்ஸ் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தமன்னா டான்ஸ் ஆடினால் படம் ஹிட்
இந்த நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன். “ இப்போதெல்லாம் ஒரு படத்தின் கதையை யாரும் பார்ப்பதில்லை . அந்த படத்தில் தமன்னா டான்ஸ் இருக்கிறது என்று தான் பார்க்கிறார்கள். தமன்னா டான்ஸ் ஆடினால் அந்த படம் ஹிட் ஆகிவிடுகிறது” என்று பார்த்திபன் கூறியிருந்தார். பார்த்திபனின் ஜெயிலர் மற்றும் அரண்மனை 4 படத்தை குறிப்பிட்டு இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் வெளியாகின. இந்த விஷயம் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் இயக்குநர் பார்த்திபன் தான் கூறிய கருத்திற்கு விளக்கமளித்துள்ளார்.
நண்பர்களே!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 19, 2024
ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும்
மன்னிக்க வேண்டுகிறேன். pic.twitter.com/lq9MtIXBvo
தனது எக்ஸ் பதிவில் அவர் “ நண்பர்களே! ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன்." என்று கூறியுள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)