மேலும் அறிய

S P Balasubramaniam : கோரிக்கை வைத்த 36 மணி நேரத்தில் நிறைவேற்றிய முதலமைச்சர்...எஸ்.பி.பி வாழ்ந்த தெரு பெயர் மாற்றம்

எஸ்.பி பாலசுப்ரமணியம் தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகரை எஸ்.பி பாலசுப்ரமணியம் சாலை என பெயர் மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு

எஸ். பி பாலசுப்ரமணியம்

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கிட்டதட்ட 16 மொழிகளில் மொத்தம் 40,000 பாடல்களை பாடி ஆறு தேசிய விருதுகளை வென்று இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வென்றுள்ளார்.தனது குழந்தைமையான குணத்தாலும், நகைச்சுவை உணர்வாலும் அனைவரது மனதிலும் ஏதோ ஒரு நினைவாக நிலைத்து நிற்பவர் எஸ்.பி.பி. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய சினிமாவிற்கு பெரும் இழப்பாக அவர் காலமானார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை

பாடகர் எஸ்.பி.பி நினைவை போற்றும் வகையில் அவர் தனது இறுதி மூச்சு வரை  வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பகுதியை எஸ்.பி.பி நகர் என பெயர் மாற்றம் செய்ய அவரது மகன் சரண் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கை வைத்த அடுத்த 36 மணி நேரத்திற்குள்ளாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காம்தார் நகர் எஸ்.பி.பி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் " திரை இசைப் பாடகர் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு
“எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு!
பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவருமான திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள், கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர்.

அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தந்தையின் நினைவு நாளன்று அவர் வாழ்ந்த தெருவிற்கு அவர் பெயரை சூட்டியது குறித்து எஸ்.பி.பியின் மகன் சரண் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget