Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் மீது வட இந்தியாவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வந்தவர் முதலமைச்சர் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக வெளிவந்திருக்க வேண்டிய திரைப்படம் ஜனநாயகன். ஆனால், தணிக்கைச் சான்றிதழ் சிக்கல் காரணமாக இந்த படம் வெளியாகவில்லை.
ஜனநாயகன் ரிலீஸ்:
இந்த சூழலில், ஜனநாயகன் திரைப்படம் வரும் வியாழக்கிழமை வெளியாகிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. ஒரு நடிகராக விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் என்பதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஏற்கனவே இணையத்தில் வெளியாகியும் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆதங்கத்தை உண்டாக்கியது. இந்த படம் வெளியாகியாததும் தவெக ஆட்சிக்கட்டிலில் அமர மிகப்பெரிய பலமாகவும் மாறியது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு:
இந்த சூழலில், விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படம் வெளியாகிறது. இது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த படத்திற்கான முன்பதிவு நேற்று முதலே தொடங்கிவிட்டது. விஜய் முதலமைச்சரான பிறகு இந்த படம் வெளியாவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. விஜய் முதலமைச்சரான பிறகு அவரது செல்வாக்கு வட இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. இதனால், இந்த படத்தின் மீது வட இந்தியாவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. ஜனநாயகன் படத்தை கொண்டாடும் விதமாக திரையரங்குகளில் விஜய் ரசிகர்களும், தவெக நிர்வாகிகளும் கொடிகள், பேனர்கள் கட்டி வருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்:
விஜய்யின் கடைசி படமான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமைதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன், நாசர், சுனில், ரெபாமோனிகா ஜான், மோனிஷா ப்ளெஸ்ஸி, நிழல்கள் ரவி, ரேவதி, பாபா சங்கர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















