Watch Video : பார்வை கற்பூர தீபமா..! நாதஸ்வரத்திலே வாசித்து அசத்திய கிராமிய கலைஞர்..!
சித்திரை திருவிழா ஒன்றில் புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலை நாதஸ்வரக் கலைஞர் வாசித்து அசத்தியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது பல கிராமங்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடல், பாடல் என கொண்டாட்டமாக இருக்கும். குறிப்பாக, கரகாட்டங்கள் பல கிராமங்களில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நமது தமிழ்நாட்டில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் கரகாட்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கரகாட்டக்குழுவில் இடம்பெற்றிருந்த நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலை தனது நாதஸ்வரத்திலே வாசித்து அசத்தினார். படத்தில் இடம்பெற்றது பார்வை கற்பூர தீபமா என்ற பாடலை போல அவரது வாசிப்பது அவ்வளவு இனிமையாக உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A Performance From #TamilNadu Temple Fest Playing The Tune Of #Srivalli Song
— Mallu Arjun Army Kerala™ (@MalluArjun_Army) May 6, 2022
#Pushpa Craze Will Not End Anytime Soon... 🥳@alluarjun @ThisIsDSP #AlluArjun pic.twitter.com/u2TejZIWOb
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட் ஆகின. மெலடி பாடலான ஸ்ரீவள்ளியும், குத்துப்பாடலான ம்ம் சொல்றியா..! ம்ம் சொல்றியா…! பாடலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்த பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத்பாசில் நடிப்பில் உருவாகிய இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சுகுமார் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். விரைவில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க : அந்த மாதிரி அவர் காட்டிக்கவே இல்ல.. அதுதான் எனக்கு ஆச்சரியம்.. சீக்ரெட் சொன்ன கீர்த்தி சுரேஷ்
மேலும் படிக்க : ”அரசியலுக்கு போனா பொய் சொல்லணும்” என்ற சிவகார்த்திகேயன்! - அதிர்ச்சியடைந்த உதயநிதி !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்