Prajin | 90’S கிட்ஸின் க்ரஷ், ஏமாற்றம், அடி, உழைப்பு.. அதிரடியாக உயர்ந்த சின்னத்தம்பி புகழ் ப்ரஜின்..
ஆங்கர், சீரியல் ஆக்டர் மற்றும் வெள்ளித்திரை நாயகன் என பன்முகத்திறமைகளை தன்னுள்ளே கொண்டுள்ளார் பல பெண்களின் ட்ரீம் பாய் பிரஜின்.
சின்னத்திரையில் 90-ஸ் கிட்ஸ்களின் நாயகனாக வலம் வந்த பிரஜின், தன்னுடைய நடிப்புத்திறமையின் மூலம் பல ரசிகள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
சின்னத்தம்பி என்றாலே நம்மில் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நடிகர் பிரபுவைத்தான். ஆனால் அதனையெல்லாம் மாற்றி தற்போது சின்னத்தம்பி என்றாலே விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் மற்றும் அதில் நடிகரான நம் பிரஜினைத்தான். அந்தளவிற்கு நடிப்புத்திறமையின் மூலம் உயர்ந்துள்ளார். இந்நேரத்தில் அவர் வாழ்வில் என்னென்ன சாதனைகளைப் புரிந்துள்ளார்? எப்படி முன்னேறினார் என்பது பற்றி இங்கே அறிந்துக்கொள்வோம்.
கேரளா மாநிலம் கோழிக்கூடு பகுதியைச்சேர்ந்த பிரஜின், தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடித்துள்ளார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அந்நேரத்தில் தான் சன்டிவி நடத்திய ஆடிஷனில் வெற்றி பெற்று ஆங்கராகப் பணியில் சேர்ந்தார். இவரின் முதல் படியே வெற்றியாக அமைந்தது என்று தான் கூறவேண்டும். ஆம் 90 கிட்ஸ்கள் அனைவருக்கும் நிச்சயம் ஞாபகம் இருக்கும். சன்மியூசிக்கில் முதல் ஆண் தொகுப்பாளராக வந்ததோடு பெண்கள் பலரின் நெஞ்சை கொள்ளை கொண்டிருப்பார். அதோடு இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் இவரின் ஷோவினை பார்க்காமல் பலர் தூங்கமாட்டார்கள். அந்தளவிற்கு தனது திறமையின் மூலம் வெற்றிபெற்றவர். இதற்காக விருதையும் பெற்றுள்ளார்.
இதனையடுத்து விஜய்டிவியில் நடிக்கும் வாய்ப்பைப்பெற்றார் பிரஜின். 2005-ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான ஒரு காதல் கதையில் என்ட்ரி கொடுத்த பிரஜின் அதே நேரத்தில் சன்டிவியிலும் பெண் என்ற சீரியலிலும் நடித்துள்ளார். இதற்கிடையே தொகுப்பாளியான சாண்ட்ராவுடன் காதலில் விழுந்த அவர், அவரை திருமணமும் செய்துகொண்ட நிலையில் இரு குழந்தைகள் உள்ளது. இதனையடுத்தும் சின்னத்திரையில் தொடர்ந்துப் பணியாற்றி வந்த நிலையில் தான், நடிகர் ஜீவா நடித்த டிஷ்யூம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் பிரஜின். மேலும் சா பூ த்ரி என்ற படத்தில் நடித்த பிரஜின், தி த்ரில்லர், டோரன்மெண்ட் உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் வெள்ளித்திரையில் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றிக்கிடைக்காத நிலையில் , மீண்டும் சின்னத்திரையில் தனது திறமையை வெளிப்படுத்திவருகிறார். குறிப்பாக சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, அன்புடன் குஷி உள்ளிட்ட சீரியல்களின் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் சின்னத்தம்பி பிரஜின் என்று தான் இவரை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இப்படி சின்னத்திரையில் நடித்துவந்த நிலையில் தான், பிரஜினுக்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்துள்ளது. நினைவெல்லாம் நீயா, சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி என்ற இருபடங்களில் நடித்து வரும் பிரஜின், மற்றொரு படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இந்தப்படத்தில் வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளித்திரையில் கால்பதித்துள்ள பிரஜின், இனி சின்னத்திரை வருவரா? மாட்டாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்த நிலையில் தான், தற்போது வைதேகி காத்திருந்தாள் என்ற புதிய சீரியலில் நடித்துவருகிறார். இருந்தப்போதும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் போல் திறமையின் மூலம் பெரிய வெற்றிக்காக தனது முயற்சிகளை வெளிப்படுத்தி வருகிறார் பிரஜின். நிச்சயம் இன்னும் பல வெற்றிவாகைகளை அவரின் திறமையின் மூலம் பெறுவார் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆங்கர், சீரியல் ஆக்டர் மற்றும் வெள்ளித்திரை நாயகன் என பன்முகத்திறமைகளை தன்னுடன் கொண்டுள்ளார் பல பெண்களின் ட்ரீம் பாய் பிரஜின்.