இனி இது சரிப்படாது... ‛ஆடை’ மாற்றும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்க்கு வரும் பட வாய்ப்புகளில் இனி கவர்ச்சியான கேரக்டர்களே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல கேரக்டரில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்காததால், இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

FOLLOW US: 

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தனது சினிமா கேரியரின் தொடக்க காலத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி கேரக்டரில் ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்தப் படம் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்ததோடு மட்டுமல்லாமல், நல்ல கேரக்டர்களும் வரத் தொடங்கின. இவரும் குடும்பபாங்கான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இதனால், கவர்ச்சியை உதறினார். 

ஆனால், சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை. ஓடிடியில் வெளியான பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்களுக்கும் வரவேற்பு கிடைக்கவில்லை.  இத்தனைக்கும் உடல் எடையை குறைத்து மெனக்கெட்டிருந்தார் கீர்த்தி. எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், பழைய நிலைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார் கீர்த்தி. அறிமுகத்தில் எந்த தோற்றத்தில் இருந்தாரோ, என்ன ஆடை அணிந்தாரோ அதே நிலைக்கு மாற முடிவு செய்துள்ளார்.

அதன் சமீபத்திய வெளிப்பாடு தான் தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ’ரங்கதே’ படம் . இதில் இதுவரை இல்லாத கவர்ச்சிப் புயலாக நடித்து சினிமா ரசிகர்களை ஆச்சர்யபட வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதிலும் நிதினுடன் படுக்கை அறை காட்சிகளிலும், நெருக்கமாகவும் நடித்து கோலிவுட், டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இனி இது சரிப்படாது... ‛ஆடை’ மாற்றும் கீர்த்தி சுரேஷ்

நிதினுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்த  ரசிகர்கள், கீர்த்தி சுரேஷா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.  இனிமேல் படங்களில் கீர்த்தியை குடும்ப பாங்கான கேரக்டரில் பார்க்கமுடியாதோ, கவர்ச்சியாக தான் பார்க்க முடியுமோ என்று வருந்தும் ஒரு தரப்பு ரசிகர்களும் உள்ளனர். 

கீர்த்தி சுரேஷிக்கு இனி வரும் படங்ளில் கவர்ச்சியான கேரக்டர்களே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல கேரக்டரில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், அதற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால், இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tags: Keerthi Suresh Nithin tamil cinema glamour role telugu cinema

தொடர்புடைய செய்திகள்

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

Parvathy Apologises | பாலியல் குற்றவாளியின் பதிவுக்கு 'லைக்' - மன்னிப்புக் கோரிய பார்வதி!

Parvathy Apologises | பாலியல் குற்றவாளியின் பதிவுக்கு 'லைக்' - மன்னிப்புக் கோரிய பார்வதி!

Shalu Shamu | சைஸ் கேட்ட ரசிகர்; நறுக்குனு பதிலளித்த ஷாலு ஷம்மு!

Shalu Shamu | சைஸ் கேட்ட ரசிகர்; நறுக்குனு பதிலளித்த ஷாலு ஷம்மு!

Director Saran Birthday: அஜித்தின் ஆக்ஷன் எண்ட்ரி கீ சரண்! காதல் மன்னன் டூ மார்க்கெட் ராஜா!

Director Saran Birthday: அஜித்தின் ஆக்ஷன் எண்ட்ரி கீ சரண்! காதல் மன்னன் டூ மார்க்கெட் ராஜா!

Director Saran Birthday: காதலில் விழுந்தவர்கள் கடக்க முடியாத சரணின் டாப் 5 சாங்ஸ்!

Director Saran Birthday: காதலில் விழுந்தவர்கள் கடக்க முடியாத சரணின் டாப் 5 சாங்ஸ்!

டாப் நியூஸ்

BREAKING: ‛பப்ஜி’ மதன் இருப்பிடம் தெரிந்தது; பெருங்களத்தூரில் மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை

BREAKING: ‛பப்ஜி’ மதன் இருப்பிடம் தெரிந்தது; பெருங்களத்தூரில் மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!