Ajith Kumar: நோ போட்டோ.. நோ மீட்டிங்.. ஆன்லைனில் ட்ரான்ஸ்பர்.. அசத்திய தல
நடிகர் சூர்யா குடும்பத்தினரை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கொரோனா நிவாரண நிதி அளித்தார்.
கொரோனா நிவாரணத்துக்கு நடிகர் அஜித் குமார் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழிழ்நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 10 லட்சம் ரூபாய் மேல் வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும், ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் வழியாக நிதியை செலுத்தலாம் என்றும் கூறினார். மேலும், நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறினார். இதனைத் தொடர்ந்து பலரும் முதலைமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்!

பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும். pic.twitter.com/1fsk1bOYqg
— M.K.Stalin (@mkstalin) May 11, 2021

இந்நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்துக்கு இந்த நிதியை அவர் அனுப்பியுள்ளார்.

Shri Ajith kumar had donated twenty five lakhs to the Chief minister relief fund today via bank transfer.
— Suresh Chandra (@SureshChandraa) May 14, 2021

இத்தகவலை நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நடிகர் சிவகுமார் அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.