ஷாருக் கானின் மன்னத் பங்களா - சுவராஸ்ய தகவல்கள்!

Published by: ஜான்சி ராணி

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக் கான் கடந்த 25 ஆண்டுகளாக மும்பையில் மன்னத் என்று அழைக்கப்படும் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நீண்ட காலமாக ஷாருக் கான் தனது வீட்டை புதுபிக்க திட்டமிட்டு வருகிறார். ஆனால் இந்த இது பாரம்பரியமான வீடு என்பதால் இந்த வீட்டை புதுப்பிக்க அவர் நீதிமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியதாக இருந்தது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு சொந்த மான நான்கு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளை ஷாருக் கான் லீஸூக்கு வாங்கியுள்ளார். ஒரு வீட்டிற்கு மாதம் 24 லட்சம் வீதம் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை ஷாருக் கான் மொத்தம் 8 கோடிக்கு வாங்கியுள்ளார்.

இந்த வீடு 1914 ஆம் ஆண்டு நரிமன் ஏ துபாஷ் என்பவரால் கட்டப்பட்டது. இத்தாலிய கட்டிடகலையை பிரதிபலிக்கும் விதமாக இந்த பங்களா கட்டப்பட்டது. தற்போது இந்த வீடு கிரேட் 3 பண்பாட்டு தளமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது

2001 ஆம் ஆண்டு ஷாருக் கான் நடித்த யெஸ் பாஸ் படத்தின் படப்பிடிப்பு இந்த வீட்டில் நடைபெற்றது . அப்போது இந்த வீட்டை பிடித்துபோய் ஷாருக் கான் உடனே இந்த வீட்டை 13 கோடிக்கு வாங்கியுள்ளார்.

கையிலிருந்த பணத்தை எல்லாம் சேர்ந்து இந்த வீட்டை வாங்கியதாகவும் ஷாருக் கான் தெரிவித்துள்ளார். கையில் இருந்த பணத்தை எல்லாம் சேர்த்து வாங்கியதால் வீட்டை புதுப்பிக்கதற்கான பணம் அவர்களிடம் இல்லை.

இதனால் தனது மனைவி கெளரியே இந்த வீட்டை எப்படியெல்லாம் புதுப்பிக்க வேண்டும் என திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மன்னத் (பிரார்த்தனை) என இந்த வீட்டிற்கு அவர்கள் பெயர் வைத்தார்களாம்.

ஷாருக் கான் 13 கோடிக்கு வாங்கிய இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 200 கோடியாகும் .

தற்போது மேலும் 2  மாடிகளை கட்டுவதற்கான வேலை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு 25 கோடி ஷாருக் கான் செலவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.