Taapsee Thomas Cup Team Coach : "கோச், ரொம்ப பெருமையா இருக்கு” : அசரவைத்த தாமஸ் கோப்பை வெற்றி.. காதலருக்கு வாழ்த்து சொன்ன டாப்ஸி.. இன்ஸ்டா வைரல்..
மதியாஸை டாப்ஸி சில வருடங்களுக்கு முன் ஒரு போட்டியை காண சென்றபோது சந்தித்துள்ளார். டாப்ஸி பல பேட்டிகளில் எப்படி ட்விட்டர் மூலம் பேசி, பின்னர் நட்பாகி, காதலானது என்னும் கதையை சொல்லி உள்ளார்.
உலகின் மிகவும் பிரபலமான தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரில் முதல் முறையாக தங்கம் வென்றது இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதில் இரட்டையர் பிரிவின் பயிற்சியாளர் முன்னாள் பேட்மிட்டன் வீரர் மதியாஸ் போ ஆவார். அவர் பிரபல இந்திய நடிகையான டாப்ஸி பண்ணுவின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி என பன் மொழிகளில் முன்னணி நாயகியாக உள்ளார். ஆடுகளம் படத்தை தொடர்ந்து அஜித்துடன் ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்சி. இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் இந்தியில் பல படங்கள் உள்ளன. இவர் சமீபத்தில் கேம் ஓவர், அனபெல்லா சேதுபதி உள்ளிட்ட ஹாரர் மூவிகளில் தோன்றியிருந்தார். இவர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக்கான சபாஷ் மீது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சபாஷ் மிது, ராஷ்மி ராக்கெட், டூபாரா, லூப் லபேடா என அரை டஜனுக்கும் அதிகமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பாலிவுட்டில் பிஸியான நடிகைகள் லிஸ்ட்டில் இருக்கிறார் டாப்சி.
இவரது காதலரும் முன்னாள் பேட்மிட்டன் வீரருமான மதியாஸ் போ இந்திய அணியின் இரட்டையர் பிரிவுக்கு பயிற்சியளித்துள்ளார். இந்த நிலையில் டாப்ஸி இன்ஸ்டாகிராமில் அணியையும், அவரது காதலரையும் வாழ்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போட்டிகளை தொடர்ச்சியாக கவனித்து அது குறித்த அப்டேட்டுகளையும் டாப்ஸி வெளியிட்டு வந்தார். அணி தங்கம் வென்ற நிலையில், முதலில் ஒரு சிறிய விடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த விடியோவிற்கு கீழ், "இந்தியாவிற்கு முதல் தாமஸ் கோப்பை" என்று எழுதி அணியில் உள்ள அனைவரையும் டேக் செய்திருந்தார். பிறகு ஒரு வீரர் பயிற்சியாளர் மதியாஸை அணைத்துள்ளபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, "மிஸ்டர் கோச், எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தி உள்ளீர்கள்", என்று எழுதி உள்ளார். மதியாஸை டாப்ஸி சில வருடங்களுக்கு முன் ஒரு போட்டியை காண சென்றபோது சந்தித்துள்ளார். டாப்ஸி பல பேட்டிகளில் எப்படி ட்விட்டர் மூலம் பேசி, பின்னர் நட்பாகி, காதலானது என்னும் கதையை சொல்லி உள்ளார்.
தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தோனேஷிய அணியை, இந்தியா எதிர்கொண்டது. அதில் 3-0 என்ற கணக்கில் இந்தோனேஷிய அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.