“போதை பழக்கமா? விஜயகாந்துக்கா? உண்மை தெரியாம பேசக்கூடாது”- ஆதங்கப்பட்ட சிவா...!
குடிச்சுட்டு மேடையில பேசுறாருனு சொல்லுற டைம்ல அவர் குடியையே நிறுத்திட்டாரு.
![“போதை பழக்கமா? விஜயகாந்துக்கா? உண்மை தெரியாம பேசக்கூடாது”- ஆதங்கப்பட்ட சிவா...! t.siva shared about actor vijayakanth “போதை பழக்கமா? விஜயகாந்துக்கா? உண்மை தெரியாம பேசக்கூடாது”- ஆதங்கப்பட்ட சிவா...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/01058dfeb04a9c7c842dfe6125dac99e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவே ஒரு நாயகனை கொண்டாடும் என்றால் அது விஜயகாந்த்தான். கேப்டன் என அன்போடு அழைக்கப்படு விஜய்காந்த் அரசியலில் குறுகிய காலம் மட்டுமே வலம் வந்திருந்தாலும், மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். ஜெயலலிதா என்னும் மிகப்பெரிய ஆளுமையை நேருக்கு நேராக எதிர்த்த முதல் ஆள் விஜயகாந்தான். கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த் உடல்நல பிரச்சனைகள் காரணமாக தீவிர அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. கம்பீரமாக பார்த்த விஜயகாந்தை முதுமை தோற்றத்தில் கண்ட ரசிகர்கள் அதிர்ந்து போயினர். இந்த நிலையில் விஜயகாந்தின் நண்பரும் , தயாரிப்பாளருமான சிவா அவர் குறித்து அறியாத பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அதில் "அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடையாதவர்கள் இருக்க முடியாது. அவருக்கு அந்த உடல்நல பிரச்சனைகள் வந்திருக்க கூடாது. ஆனால் வந்துவிட்டது. இருந்தாலும் அவர் நம்மகூட இருக்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம்தான். அவரால எல்லாமே பார்க்க முடியும் . ஆனால் ரியாக்ட் செய்ய முடியலை அவ்வளவுதான். இப்போ அவர் ஒரு குழந்தை மாதிரி இருக்காரு. வேறு எந்த ஒரு மனிதராக இருந்தாலும், இவ்வளவு உடல் உபாதைகளை தாண்டி இருந்திருக்க முடியாது. அவர் செய்த தருமம் அவர் தலையை காத்துக்கொண்டிருக்கிறது. அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு பெரிய சரித்திரம். ஆளுமை நிறைந்த நடிகரை , தலைவரை , நண்பரை, தயாரிப்பாளரை பார்ப்பது கடினம். அந்த காலத்துல அவருக்கு பவுன்சர்ஸ் கிடையாது. கேரோவன் கிடையாது. பாடி காட்ஸ் கிடையாது. ஆனாலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு கூட்டத்துல இறங்கி போற முதல் ஆளா அவர்தான் இருப்பாரு. நடிகனா அவர் வாழ்ந்தது கிடையாது. ஆடம்பரமா இருக்க மாட்டாரு. எல்லோருக்குமே எல்லாத்தையும் கொடுத்துடுவாரு. ரொம்ப பாஸிட்டிவான ஆளு. சாப்பிடுவதும் , நல்லா தூங்குவதும்தான் மனித வாழ்க்கைனு நினைக்க கூடிய ஆள். அரசியல் மீதான அதீத ஈடுபாடுதான், அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்துடுச்சுனு நான் நினைக்குறேன். குடிச்சுட்டு மேடையில பேசுறாருனு சொல்லுற டைம்ல அவர் குடியையே நிறுத்திட்டாரு. போதை பழக்கத்தால அவர் இப்படி ஆகல. தெரியாம விமர்சனம் செய்துட்டாங்க. அரசியல் ஓவர் லோட் பண்ணிடுச்சு. அரசியலில் கணக்கு போட்டு வந்தவர் இல்லை. சூழலால அப்படி வந்துட்டார். சம்பளம் எவ்வளவுனு கூட அவருக்கு தெரியாது. ரொம்ப ஜாலியான ஆள் . நண்பர்கள்தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும். பழகிட்டா உயிரையும் கொடுப்பார். டூப் போடாம நடிப்பாரு. தைரியமான ஆள். அட் லாஸ்ட் எல்லோரும் முதுமையை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் . பாவமாக பார்க்க வேண்டாம். ” என டி.சிவா தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)