T Rajendar: ‘சோத்துக்கு தாளம் போட போற” என சொன்ன வாத்தியார்.. டி.ஆர்., சொன்ன பதிலை கேட்டு வியந்த ரசிகர்கள்..!
பிடிவாதக்காரனாக இருந்த என்னை வயது பக்குவப்படுத்தி விட்டதாக திரைப்பட நிகழ்ச்சியில் பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
பிடிவாதக்காரனாக இருந்த என்னை வயது பக்குவப்படுத்தி விட்டதாக திரைப்பட நிகழ்ச்சியில் பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் புதுபுது முயற்சிகள் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன. நடன அசைவு முதல் தொழில்நுட்ப முயற்சிகள் வரை ரசிகர்கள் கவரும் வகையில் இடம் பெறுகிறது. அந்த வகையில் தற்போது “நான் கடைசி வரை தமிழன்” என்ற படம் உருவாகவுள்ளது. சுமார் 163 மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் ,தயாரிப்பு, இயக்கம் என அனைத்தையும் எம்.ஏ.ராஜேந்திரன் மேற்கொள்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பன்முக கலைஞரான டி.ராஜேந்தர் பாடல்கள் எழுதி இசையமைக்கிறார்.
Today's newspaper posters #DinaThanthi#tciDailyPosters 7/12
— TamilCinemaInfo (@TamilCinemaInf1) September 3, 2023
Naan Kadaisi Varai Tamizhan
திரைப்பட பூஜை மற்றும் படத்தின் பெயர் வெளியீட்டு விழா#NaanKadaisiVaraiTamizhan #நான்_கடைசி_வரை_தமிழன் #TRajendar #MARajendran pic.twitter.com/4aOZ5qVnHK
இந்நிகழ்ச்சியில் பேசிய டி.ராஜேந்தர், “நான் கடைசி வரை தமிழன் என்ற படத்தை 163 மொழிகளில் உருவாக்குவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ள தயாரிப்பாளர், இயக்குநர் எம்.ஏ.ராஜேந்திரனுக்கு எனது பாராட்டுகள். நான் இந்த நிகழ்ச்சிக்கு வர காரணம் இறைவன் தான். காரணம் நேற்று இரவு வரை ஹைதராபாத்தில் இருந்தேன். ராஜேந்திரன் பெயரில் கடைசியில் உள்ள திறனை தான் பார்க்கிறேன். மைக்கை பார்த்ததுமே சிலருக்கு நடுக்கம், தயக்கம் வரும். ஆனால் அவர் அருமையாக பேசினார். இந்த படத்துக்கு நான் இசையமைக்க காரணம் அந்த டைட்டில் மட்டும் தான்.
முருகன் என்றால் தமிழ், முருகா என்று அழைத்ததால் எனக்கு வருகிறது வருவாய். நானும் ஒரு காலத்தில் பிடிவாதக்காரனாக இருந்தேன். ஆனால் 60 வயதை கடந்து விட்ட பிறகு பக்குவப்பட்டு விட்டேன். இயக்குநரிடம் எனக்கு பிடித்தது பிடிவாதம் தான். அவரிடம் இந்த படத்துக்கு உயிருக்கும் வரை தமிழன் என்று பெயர் வைக்கலாமே என கேட்டேன். அவரோ, ‘நான் கடைசி வரை தமிழன்’ என்று பிடிவாதமாக இருந்தார்.
நான் பண்ணாரி அம்மன் படத்துக்குப் பிறகு இசையமைப்பதில்லை. ஒரு படத்துக்கு இசை என்பது, ஒரு பாட்டுக்கு போட வைப்பது தாளம். அப்பதான் அந்த படம் வசூல் பண்ணும். இதற்கு உதாரணம் நான், எனக்கு முன்னாள் இருந்த கலைஞர்கள். கலை, ஞானம் இல்லாமல் சினிமாவில் இருக்க முடியாது. என்னால தாளம் போடாம இருக்க முடியாது. எங்க வீட்டுல கூட என்னோட வாழுறது தாளம் தான். ஸ்கூலில் தாளம் போடும் போது வாத்தியாரு சோத்துக்கு தாளம் போட போறேன்னு சொன்னாரு. நான் சொன்னேன், நான் போடுற தாளம் தான் சோறு போடப் போறேன்னு சொன்னேன்" என டி.ராஜேந்தர் தெரிவித்தார்.