மேலும் அறிய

T Rajendar Song: ‛நாங்க வாழணுமா... சாகணுமா...’ டி.ஆர் கடைசியாக பாடிய பாடல் ட்ரெண்டிங்..

பிரபல இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் கடைசியாக பாடிய பாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இலங்கை மக்களுக்காக அவர் கடைசியாக பாடிய பாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், அரசியல் கட்சி தலைவர் என பன்முகம் கொண்டவரான டி. ராஜேந்தருக்கு அண்மையில் நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை போரூரில் உள்ள ராமசந்திர மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை அடுத்து, மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையில் அடைப்பு சீர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சிலம்பரசன் அறிக்கை

இந்தநிலையில், தனது தந்தையின் உடல்நலம் குறித்து சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். 

எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி. உங்கள் அன்புள்ள சிலம்பரசன்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா செல்கிறாரா டி.ஆர்?

சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அவர் முழுமையாக குணமடையாததால் மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா அல்லது சிங்கபூர் அழைத்துச் செல்லப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், அவரது மனைவி உஷா, மகன்கள் சிம்பு, குறலரசன், மகள் இலக்கியா ஆகியோர் டி. ராஜேந்தருடன் அமெரிக்கா செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்து வருவதாக டி.ஆரின் நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்திருக்கிறது.

டி.ஆரின் உடல் நலம் அபாய கட்டத்தில் இல்லை என்றாலும், தொடர் சிகிச்சை தேவைப்படுவதால் அவர் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டி.ஆரின் உடல் நலம் குறித்து சிம்பு இன்று அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளார். 67 வயதான டி.ஆர் 1980-களில் இருந்து தமிழ் சினிமாவில் பணியாற்றி வருபவர், தனக்கென தனி முத்திரையை பதித்தவர். விரைவில் அவர் உடல் நலம் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என கோலிவுட்டில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "2025 நம்ம கையில" சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கப் போகும் விஜய்! தமிழக மனங்களை வெல்லுமா தவெக?
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
"காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்" தரையில் உருண்டு அலறிய கும்பகோணம் மேயர் - அப்படி என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "2025 நம்ம கையில" சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கப் போகும் விஜய்! தமிழக மனங்களை வெல்லுமா தவெக?
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
"காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்" தரையில் உருண்டு அலறிய கும்பகோணம் மேயர் - அப்படி என்ன நடந்தது?
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
Last day Of The Year 2024: ஆண்டின் கடைசி நாள்..! 2024-ஐ எப்படி வழியனுப்பலாம்? இதை சொல்லி பாருங்களேன்..!
Last day Of The Year 2024: ஆண்டின் கடைசி நாள்..! 2024-ஐ எப்படி வழியனுப்பலாம்? இதை சொல்லி பாருங்களேன்..!
Breaking News LIVE: உலகம் முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்ட்டாட்டம்! கண்ணாடி பாலத்தை திறந்த வைக்கும் முதலமைச்சர்!
Breaking News LIVE: உலகம் முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்ட்டாட்டம்! கண்ணாடி பாலத்தை திறந்த வைக்கும் முதலமைச்சர்!
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
Embed widget