Kamalhaasan : ம்யூசிக்கே மாறுது..! கேரள அனிருத்தை களமிறக்கும் கமல்?! அடுத்த படத்துக்காக அடித்து ஆடும் ஆண்டவர்!
நடிகர் கமல்ஹாசன், பிரபல மலையாள இயக்குநரான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
லோகேஷ் கனகாரஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் பாஸில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் விக்ரம். இந்த படம் கடந்த ஜூன் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து திரையிடும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. படம் வெளியாகி முதல் 25 நாள்களை கடந்த வேளையிலும் திரையரங்கு நிறைந்த காட்சிகளாகவே இருந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலும் இத்திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. எதிர்பார்க்காத வசூல், விமர்சன ரீதியாகவும் நல்ல பெயர் என விக்ரம் ஒரு கலக்குகலக்கியது. ஓடிடி ரிலீஸ் ஆன நிலையில் தற்போதுதான் விக்ரம் ஃபீவர் சற்று தணிந்திருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் அடுத்தப்படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
View this post on Instagram
தற்போது நடிகர் கமல்ஹாசன், பிரபல மலையாள இயக்குநரான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதை கமலும் சமீபத்திய மேடையிலும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தை தொடர்ந்து கமலில் ராஜ்கமல் நிறுவனமே இந்த புதிய படத்தை தயாரிக்க, அதற்கான கதாபாத்திர தேர்வும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல், இந்த திரைப்படத்திலும் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி அல்லது பகத் பாசில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன், பகத் பாசிலை கொண்டு மாலிக் திரைப்படத்தை இயக்கினார். இது மலையாளம் திரையுலகை கடந்து தமிழ்நாடு அளவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் காரணமாக பகத் பாசிலே நடிகர் கமலுக்கு வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. அதேவேளையில் மம்முட்டியிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக ஏற்கெனவே தகவல் கசிந்த நிலையில் தற்போது இசை அமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
விக்ரம் பட வெற்றியில் அனிருத்துக்கு சம பங்கு இருப்பதால் தன்னுடைய அடுத்த படத்திலும் அனிருத்தையே கமல் தேர்வு செய்வார் எனக் கூறப்பட்டது.ஆனால் கமல் கேரளாவின் அனிருத்தை தமிழகத்துக்கு இறக்குமதி செய்வார் என கூறப்படுகிறது. தமிழகத்தில் அனிருத் எப்படியோ, அப்படி கேரளாவில் மிகவும் பிரபலமான இசை அமைப்பாளர் சுஷின் ஷ்யாம். இவர் மலையாளத்தில் வெளியான பல முக்கியப்படங்களுக்கு இசை அமைத்து பிரபலமானவர். கும்பலங்கி நைட்ஸ், வைரஸ், மாலிக், குருப், மின்னல் முரளி உள்ளிட்ட பல படங்களில் இவரின் இசை கவனிக்க வைத்தது. இந்நிலையில் அவரே கமலின் அடுத்தப்படத்துக்கு இசை அமைப்பாளர் எனக் கூறப்படுகிறது. தகவல் உறுதி என்றால், சுஷின் ஷ்யாம்க்கு நல்ல தமிழ் எண்ட்ரி இருக்குமென கூறப்படுகிறது.