Vaadivasal: வாடிவாசல் படத்தில் இருந்தும் விலகினாரா சூர்யா..? உண்மை நிலவரம் இதுதான்..!
நடிகர் சூர்யா - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருந்த 'வாடிவாசல்' திரைப்படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. இது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சூர்யா - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருந்த 'வாடிவாசல்' திரைப்படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவி வந்தன. ஏற்கனவே இயக்குநர் பாலாவின் 'வணங்கான்' படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிய சோகத்தில் இருந்த அவரின் ரசிகர்களுக்கு வாடிவாசல் படமும் கைவிடப்பட்டது என்ற தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வாடிவாசலில் இருந்து விலகினார் சூர்யா ?
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக ஈடுபட்டுள்ளார். 3டி எஃபெக்ட் மூலம் உருவாக்கப்படும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி சூர்யா ஜோடியாக இப்படத்தில் நடித்த வருகிறார். அந்த வகையில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா இணையும் 'வாடிவாசல்' படத்தில் இருந்து சூர்யா விலகியதாக வதந்திகள் மிகவும் வேகமாக காட்டு தீ போல பரவியது.
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்க திட்டமிடப்பட்ட இப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
#Vaadivasal will definitely happen , Pre-production works are on full swing, Rumours spreads by a section of media! 💥
— Cinepedia_offl (@cinepedia_offl) December 23, 2022
He said in a fans meet today.❤️ pic.twitter.com/78TciT7ULi
தயாரிப்பாளர் கொடுத்த பளிச் விளக்கம் :
இது குறித்து வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அளித்த பேட்டியில் 'இது ஒரு ஆதாரமற்ற வதந்தி. பத்து நிமிட புகழுக்காக மக்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள். இது உண்மை அல்ல அதனால் யாரும் இதை நம்ப வேண்டாம். படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன என கூறியிருந்தார்.
.@Suriya_offl confirms today that #Vaadivasal is on contrary to rumours spreads by a section of media! pic.twitter.com/uhcNDGpHB6
— Rajasekar (@sekartweets) December 23, 2022
ட்ரெண்டை திசை திருப்பிய வெற்றிமாறன் :
இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன். பல ஜாம்பவான்களும் இவரை நேரடியாகவே பாராட்டியுள்ளனர். அவரின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படமும் வெக்கை நாவலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜெயமோகனின் நாவலை மையமாக வைத்து உருவாக்கிய திரைப்படம் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை திரைப்படம். தற்போது எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக்க உள்ள படம் 'வாடிவாசல்'.