மேலும் அறிய

Kanguva Surya: கங்குவா லுக்கில் வெயிட் ஏற்றிய சூர்யா.. கொடைக்கானலில் பிரியாணி விருந்து... லைக்ஸ் அள்ளும் ஃபோட்டோ!

கங்குவா படத்தின் கொடைக்கானல் ஷூட்டிங் நிறைவடைந்ததாகவும், சூர்யா படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில  சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக பீரியட் படமாக  நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் தயாராகி வருகிறது.

சூர்யாவின் 42ஆவது படமான இந்தப் படத்தை யூவி கிரியேஷன்ஸ் - ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் கதை நடப்பது போலவும், ஃபேண்டஸி கதையாகவும் இப்படம் தயாராகி வரும் நிலையில், 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகவும் சூர்யாவின் கரியரில் தயாராகும் மிக பிரம்மாண்டமான படமாக இப்படம் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக இந்தப் படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், நடிகை மிருணாள் தாக்கூர் மற்றொரு கதாநாயகி என தகவல்கள் வெளியாகி வருகின்றன. முக்காட்டார், அரத்தர், மண்டாங்கர், வெண்காட்டார், பெருமனத்தார் என இந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் வித்தியாசமான பெயர்களும் முன்னதாக அறிவிக்கப்பட்டன. 

முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு கோவா,பிஜூ தீவுகள் என நடைபெற்று வந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன் கொடைக்கானலில் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், கங்குவா படத்தின் கொடைக்கானல் ஷூட்டிங் நிறைவடைந்ததாகவும், சூர்யா படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கங்குவா கெட் அப்பில் இருக்கும் கொடைக்கானல் ஷூட்டிங் தளத்தில் படத்தின் சண்டைப் பயிற்சியாளருடன் சூர்யா இருக்கும் புகைப்படமும் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. 

 

கங்குவா படத்தில் சூர்யாவின் முகம் தெரியும்படியான போஸ்டர்கள் இதுவரை எதுவும் வெளியாகாத நிலையில், தன் கதாபாத்திரத்துக்காக சூர்யா எடைக் கூட்டியுள்ளது இந்தப் புகைப்படத்தில் தெரிகிறது. இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக இந்தப் புகைப்படத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கொடைக்கானலில் கடந்த வாரத்தில் மழை பொழிந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது, படக்குழுவினர் முழுவீச்சில் படப்பிடிப்பில் ஈடுபட்டதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் சமூகவலைதளத்தில் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது.

முன்னதாக கங்குவா படத்தின் தென்னிந்திய உரிமை அமேசான் ஓடிடி தளத்தில் 80 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகவும் இது வரை எந்த ஒரு தென்னிந்திய திரைப்படமும் இந்தத் தொகைக்கு விற்பனையானதில்லை எனவும் படத்தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Ilayaraja Controversy Tweet: மனோபாலாவை கொச்சைப்படுத்தி தற்பெருமை பேசுவதா? - இளையராஜாவிடம் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

Shankar on PS 2: "மணி செதுக்கியிருக்கார்.. பிரமிக்க வைத்த விக்ரம், ஐஸ்வர்யாராய்.." பொன்னியின் செல்வனை பார்த்து மிரண்டு போன சங்கர்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
"ஸ்டாலின், பினராயி விஜயனுக்கு சிறை! பா.ஜ.க. போடும் ப்ளான்" பகீர் கிளப்பிய கெஜ்ரிவால்
பள்ளி வாகனங்களில் பராமரிப்பு எப்படி உள்ளது? - மதுரையில்  போக்குவரத்துதுறை அலுவலர்கள் நேரில் ஆய்வு
பள்ளி வாகனங்களில் பராமரிப்பு எப்படி உள்ளது? - மதுரையில் போக்குவரத்துதுறை அலுவலர்கள் நேரில் ஆய்வு
ரிஷப் பந்த்-க்கு அபராதம்.. ஒரு போட்டியில் சஸ்பெண்ட்.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி!
ரிஷப் பந்த்-க்கு அபராதம்.. ஒரு போட்டியில் சஸ்பெண்ட்.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul Gandhi on Modi | நான் ரெடி.. நீங்க ரெடியா? நேருக்கு நேர் வாங்க மோடி.. ராகுல் சரமாரி கேள்விPosco Cases | 30,000 சிறுமிகள் கர்ப்பம் தமிழ்நாட்டின் அவலம்!Shakeela Vs Bayilwan Ranganathan | ”அவ நாக்கு அழுகிடும்” சகீலா-பயில்வான் மோதல் சர்ச்சையில் விவாதம்Police Inspection at Savukku house | சவுக்கு வீட்டில் கஞ்சா சிகரெட்கள்.. தனிப்படை சோதனையில் பறிமுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
"ஸ்டாலின், பினராயி விஜயனுக்கு சிறை! பா.ஜ.க. போடும் ப்ளான்" பகீர் கிளப்பிய கெஜ்ரிவால்
பள்ளி வாகனங்களில் பராமரிப்பு எப்படி உள்ளது? - மதுரையில்  போக்குவரத்துதுறை அலுவலர்கள் நேரில் ஆய்வு
பள்ளி வாகனங்களில் பராமரிப்பு எப்படி உள்ளது? - மதுரையில் போக்குவரத்துதுறை அலுவலர்கள் நேரில் ஆய்வு
ரிஷப் பந்த்-க்கு அபராதம்.. ஒரு போட்டியில் சஸ்பெண்ட்.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி!
ரிஷப் பந்த்-க்கு அபராதம்.. ஒரு போட்டியில் சஸ்பெண்ட்.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
West Nile Fever: வெஸ்ட் நைல் காய்ச்சல்: அறிகுறிகள் இருந்தால் உடனடி பரிசோதனை.. பொது சுகாதார துறை உத்தரவு..
வெஸ்ட் நைல் காய்ச்சல்: அறிகுறிகள் இருந்தால் உடனடி பரிசோதனை.. பொது சுகாதார துறை உத்தரவு..
Breaking News LIVE: மக்களவை 3-ம் கட்ட தேர்தல்: 65.68 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Breaking News LIVE: மக்களவை 3-ம் கட்ட தேர்தல்: 65.68 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Embed widget