Shankar on PS 2: "மணி செதுக்கியிருக்கார்.. பிரமிக்க வைத்த விக்ரம், ஐஸ்வர்யாராய்.." பொன்னியின் செல்வனை பார்த்து மிரண்டு போன சங்கர்..!
ஏ.ஆர்.ரஹ்மான் இசை உண்மையிலேயே அற்புதம். ரவிவர்மனின் ஃப்ரேம்கள் வசீகரமாக இருந்தன. அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் பாராட்டுக்கள் என சங்கர் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்து ரசித்த இயக்குநர் சங்கர், மணிரத்னம், விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோரைப் பாராட்டியுள்ளார்.
பொன்னியின் செல்வன் 2:
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக வடிவம்பெற்று உலகம் முழுவதுமுள்ள தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனமீர்த்து வருகிறது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. கடந்த ஏப்.28ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான நிலையில், ஒரு வாரத்தில் இந்தியா முழுவதும் 142 கோடிகள் வரை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கர் பாராட்டு:
மேலும் உலகம் முழுவதும் இப்படம் 300 கோடிகள் வசூலை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை முன்னதாக பார்த்து ரசித்த இயக்குநர் சங்கர் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.
“பொன்னியின் செல்வன் 2 படத்தை மணிரத்னம் சார் மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். குறிப்பாக ஐஸ்வர்யாராய் பச்சன் - விக்ரம் இருவரும் அற்புதமாக நடித்து, பிரமிக்க வைத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை உண்மையிலேயே அற்புதம். ரவிவர்மனின் ஃப்ரேம்கள் வசீகரமாக இருந்தன. அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் வல்லுநர்களுக்கும் பாராட்டுக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
#PS2,meticulously crafted by Maestro #ManiRatnam sir,especially the scene with #AishwaryaRaiBachchan & @chiyaan who were scintillating &stunning makes history. @arrahman ‘s music-truly marvelous! @dop_ravivarman ‘s frames were alluring!Kudos-all the actors,technicians and crew👏
— Shankar Shanmugham (@shankarshanmugh) May 5, 2023
முன்னதாக ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் கமல்ஹாசன், பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் பெருமை என்றும், தமிழரின் பெருமையைப் போற்றும் இத்தகைய படத்தை எடுக்க வேண்டும் என்பதற்கே தனி துணிச்சல் வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
நட்சத்திர பட்டாளங்கள்:
ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா,கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா, பிரபு, ரஹ்மான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. நாவலில் உள்ள கதாபாத்திரங்கள் நாவலைத் தாண்டி படத்தில் பல காட்சிகள் மாற்றப்பட்டிருந்தது குறித்து அதிருப்திகள், கலவையான விமர்சனங்கள் எழுந்தன. எனினும் இவற்றைத் தாண்டி படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
மேலும் படிக்க: Ilayaraja Controversy Tweet: மனோபாலாவை கொச்சைப்படுத்தி தற்பெருமை பேசுவதா? - இளையராஜாவிடம் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்