Survivor Tamil: குறைகளை அடுக்கிய பார்வதி.. ஒதுக்கித்தள்ளிய வேடர் கூடாரம்.. பஞ்சாயத்தில் ட்விஸ்ட்..!
வாக்கு கேட்குறதுக்காக பேசல என சொல்லிவிட்டு, எல்லாரிடமும் ”காபி சாப்டீங்களாண்ணா” டோனிலேயே கேட்டுக்கொண்டிருந்தார்.
Zee Tamil சர்வைவர் நிகழ்ச்சியில் 15-வது நாள் எபிசோட் இன்று. நேற்று பெரிய வித்தியாசத்தில் காடர்கள் வெற்றி பெற்றதாகவும், அவர்கள் ஏதோ ஒரு யுக்தியால் வெற்றியைச் சாதித்தார்கள் என காடர்களை பாராட்டியிருந்தார். தோற்ற அணி ட்ரைபல் பஞ்சாயத்திற்கு வர வேண்டும் என வேடர்கள் அணியை அர்ஜூன் அழைத்தார். வெற்றி பெற்றதால் காடர்கள் அணிக்கு வாள் வழங்கப்பட்டது. பஞ்சாயத்திற்கு செல்ல வேண்டியதில்லை என்கிற நிம்மதியோடு காடர்கள் அணி தீவு திரும்பியது.
View this post on Instagram
”வாக்கு கேக்கல, வாக்கு கேக்கல”
இன்று ட்ரைப் பஞ்சாயத்தில் வேடர்களில் ஒருவர் நாமினேஷன் என பரபரப்பாக முடிந்தது நேற்றைய எபிசோட்! ட்ரைபல் பஞ்சாயத்துக்கு போவதற்கு முன்பே, ’வாக்கு கேட்குறதுக்காக பேசல’ என சொல்லி சொல்லியே பார்வதி அனைவரிடமும், கருத்துக்கேட்டுக்கொண்டிருந்தார். வாக்கு கேட்குறதுக்காக பேசல என சொல்லிவிட்டு, எல்லாரிடமும் ”காபி சாப்டீங்களாண்ணா” டோனிலேயே கேட்டுக்கொண்டிருந்தார்.
ட்ரைபல் பஞ்சாயத்துக்கு வந்து தீப்பந்தம் கொண்டுவந்து வைத்துவிட்டு, உட்கார்ந்தவுடன், நான் தலைவியாக இருந்திருந்தால், பஞ்சாயத்துக்காகவே வந்திருக்க மாட்டோம் என அதிரடி குண்டு போட்டார் பார்வதி. யாரும் என்னுடன் ஜெல்லாகவில்லை, நான் எப்போதும் தனியாக இருக்கிறேன் எனவே சொல்லிக்கொண்டிருந்தார். பார்வதிக்கு எலிமினேட் வாக்கு கொடுக்க வேண்டாம் என நினைத்து வந்தவர்கள் கூட, ட்ரைபல் பஞ்சாயத்தில் பார்வதி பேசிய வார்த்தைகளால் முடிவை மாற்றிக்கொண்டு அவரை வெளியேற்றுவதற்காக ஓட்டு ஓலையை போட்டார்கள். கண்ணகி சிலம்பு லைஃப் லைனிலும் வெள்ளை முத்துக்கள் வந்ததால், பார்வதி அங்கேயும் அவுட்.
இறுதியாக, வேடர்கள் கூடாரத்துக்கு தனது கோபத்தை, பதிலை லெட்டரில் தெரிவித்துவிட்டு, ”Do i deserve Elimination" என்கிறார் பார்வதி.
அப்படியே Close வைத்து முடிகிறது சர்வைவர் பார்ட் - 15.
மூன்றாம் உலகத்துக்கு போகப்போகிறாரா பார்வதி?