Soorarai Pottru Awards List: ஜெயிச்சிட்டோம் மாறா.. ஐந்து விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று டீம்.. இதுதான் சுவாரஸ்யம்..
68th National Film Awards 2022: ஐந்து தேசிய விருதுகளை பெற்றது சூரரைப் போற்று திரைப்படம்.
![Soorarai Pottru Awards List: ஜெயிச்சிட்டோம் மாறா.. ஐந்து விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று டீம்.. இதுதான் சுவாரஸ்யம்.. Suriya Soorarai Pottru Bagged Five Awards Best Actor Actress Feature Film 68th National Film Awards 2022 Soorarai Pottru Awards List: ஜெயிச்சிட்டோம் மாறா.. ஐந்து விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று டீம்.. இதுதான் சுவாரஸ்யம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/22/20f074a92d72043afa4cbbf31460ae411658492238_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டிற்கான விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம்.
அதன்படி, தமிழில் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் ஐந்து விருதுகளை குவித்துள்ளது.
சிறந்தப் திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகியப் பிரிவுகளில் மொத்தம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
சூரரைப்போற்று திரைப்படத்திற்காக, சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யாவிற்கும், சிறந்த நடிகை விருது அபர்ணா பாலமுரளிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த பின்னணி இசைக்கான விருது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்க்கு அளிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலின் உஷாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)