Kanguva : வெட்டி வீசியாச்சு... கங்குவா படத்தில் 12 நிமிட காட்சிகள் நீக்கம்
கங்குவா படத்திற்கு அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கங்குவா
சூர்யா நடித்துள்ள கங்குவஅ திரைப்படம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கங்குவா படத்தில் பல்வேறு குறைகளை ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். பொதுவாக படம் நன்றாக இல்லாவிட்டாலும் சூர்யாவின் நடிப்பு எப்போது ரசிக்கப்படும். ஆனால் கங்குவா படத்தில் சூர்யா நடித்த பிரான்சிஸ் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்வதற்கு பதிலாக எரிச்சலூட்டும் விதமாக அமைந்துள்ளது. படத்தின் முதல் அரை மணி நேர காட்சிகளில் சத்தம் அதிகம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சில பாயிண்ட்கள் குறைத்து படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்களுக்கு படக்குழு அறிவுறுத்தியது.
சூர்யாவின் மனைவி ஜோதிகா கங்குவா படத்தின் முதல் 30 நிமிடம் சுமாராக இருப்பதாக தனது விமர்சனத்தில் தெரிவித்திருந்தார். இந்த காட்சிகள் மொத்த படத்திற்குமே நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று தந்த நிலையில் தற்போது கங்குவா படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. பிரான்சிஸ் சூர்யாவின் 12 நிமிடக்காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கங்குவா படத்தின் மொத்த நீளமே இரண்டரை மணி நேரத்திற்கு குறைவாக இருந்த நிலையில் தற்போது கூடுதல் 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டது ரசிகர்களிடம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
#Kanguva 12 Mins has been Trimmed and re-censored ✅
— AmuthaBharathi (@CinemaWithAB) November 18, 2024
Scenes involving present portions have been removed mostly ✂️ pic.twitter.com/9UEJVs7qZz
மேலும் படிக்க : Nayanthara : யார் உண்மையான லேடி சூப்பர்ஸ்டார்...நயன்தாராவுக்கே டஃப் கொடுத்த அந்த நடிகை யார்?
Jyothika : சூர்யா சரிவுக்கு இதுதான் காரணமா...ஜோதிகா மேல் விழுந்த பழி