Suriya Birthday: சூர்யா பிறந்த நாளில் சூடாகும் தியேட்டர்... இரண்டு படங்களை திரையிடத் திட்டம்!
சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ ஆகிய படங்கள் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 22 முதல் ஜூலை 24 வரை சென்னை திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன.
நடிகர் சூர்யா நிறைய முயற்சிகள் மற்றும் உழைப்பால் திரையுலகில் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சமீப காலமாக தொடர்ந்து ப்ளாக்பஸ்டர்களை கொடுத்து அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்றுள்ளார். சூர்யா எப்போதுமே புது கதாபாத்திரங்களை பரிசோதித்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் பெயர் பெற்றவர், இது அவருக்கு நிறைய ரசிகர்களைப் பெற உதவியிருக்கிறது. சமீபத்தில் அவர் பிளாக்பஸ்டர் ஹிட் படமான” விக்ரம்” இல் அவரது கேமியோ ரோலுக்கு பாஸிடிவ் விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றார்.
இந்நிலையில் ஓடிடி- இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற சூரரைப்போற்று, ஜெய் பீம் ஆகிய இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ ஆகிய படங்கள் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 22 முதல் ஜூலை 24 வரை சென்னை திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
சூரரைப் போற்று, தமிழ் திரைத்துறையில் ஒரு இயக்குனராக அறிமுகமாகி புகழ் பெற்றுள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் "ஏர் டெக்கான்" நிறுவனத்தின் அதிபரான திரு. ஜி ஆர் கோபிநாத், அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் சுயசரிதை திரைப்படம். இந்தியாவில் புகழ் பெற்ற பிரபல தொழிலதிபரின் வாழ்க்கையை ஒரு சுவாரஸ்ய திரைக்கதையாக வடிவமைத்து உருவாக்கி உள்ள இப்படத்திற்கு, நடிகர் சூர்யா தனது 2D என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வெளியாகவிருந்த இப்படம், தியேட்டர் பணிநிறுத்தம் காரணத்தால் அமேசான் ஆன்லைன் ப்ரைம் வீடியோ என்ற ஓடிடி தளத்தில் 2020 நவம்பர் 12ல் வெளியானது.
மற்றொரு படமான, "ஜெய் பீம்" உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அழுத்தமான திரைப்படம். ராஜகண்ணு (மணிகண்டன்) மற்றும் செங்கனி (லிஜோமோல் ஜோஸ்), வறுமையிலும் மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான வாழ்க்கையை நடத்தும், ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் தம்பதி. ஒரு கொள்ளை வழக்கில் ராஜகண்ணு மற்றும் சிலரை போலீசார் கைது செய்து, கொடூரமாக சித்திரவதை செய்ததால் நிலைமை மாறுகிறது. பின்னர், சந்தேகநபர்கள் பிடியில் இருந்து தப்பிச் சென்றதாகவும், அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கும் ஆதரவற்ற செங்கானி, தனது கணவர் மற்றும் மற்றவர்கள் காணாமல் போனதன் மர்மத்தை அவிழ்க்க வழக்கறிஞர் சந்துரு (சூர்யா) உதவியை நாடுகிறார்.
Also Read | மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஈபிஎஸ்... 25 ம் தேதி களமிறங்கும் அதிமுக
தற்போது நடிகர் சூர்யா, 'வணங்கான்' படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்த படமான 'வாடிவாசல்' படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இயக்குனர்கள் சுதா கொங்கரா மற்றும் சிவா ஆகியோருடன் சில திட்டங்களையும் அவர் தயாரிப்பில் உள்ளது.