Suriya 44: ட்ரிபிள் ட்ரீட்! சூர்யா பிறந்தநாளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - படுகுஷியில் ரசிகர்கள்
Suriya 44 : நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'சூர்யா 44 'படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 42வது படமாகும். பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ்:
அதன் தொடர்ச்சியாக நடிகர் சூர்யா - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் 'சூர்யா 44' என தற்காலிமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் கதையை 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு முன்னரே தயாராக வைத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். நடிகர் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அவர்களுடன் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அந்தமானில் படப்பிடிப்பு:
கடந்த ஜூன் 2ம் தேதி முதல் சூர்யா 44 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மும்மரமாக நடைபெற்று வருகிறது. சூர்யா - பூஜா ஹெக்டேவின் காம்போவில் இரண்டு பாடல்கள் அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகளுடன் சேர்த்து சில ஆக்ஷன் காட்சிகளும் அங்கே படமாக்கபட்டுள்ளன. சூர்யா 44 ஒரு அதிரடியன ஆக்ஷன் திரைப்படம் என்பதால் ஃபைட் சீக்வன்ஸ்களை ஃபைட் மாஸ்டர் கீசா காம்பக்டீ மேற்கொண்டுள்ளார். எனவே மக்கள் விரும்பும் அனல் தெறிக்கும் சண்டை காட்சிகளை இப்படத்தில் எதிர்பார்க்கலாம். ஃபைட் மாஸ்டரே சூர்யாவின் ஒத்துழைப்பை பார்த்து அசந்து விட்டார் என கூறப்படுகிறது.
அடுத்த ஷெட்யூல் :
அந்தமானில் நடைபெற்று வரும் 'சூர்யா 44' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை 30 நாட்களில் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. அதன்படி சூர்யா நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. மற்ற நடிகர்களின் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பியதும் படக்குழு சிறிது காலம் பிரேக் எடுத்து கொண்ட பிறகு மீண்டும் செகண்ட் ஷெட்யூல் ஊட்டியில் நடைபெற இருப்பதால் படக்குழு அங்கே சந்திக்க உள்ளனர்.
பர்த்டே ஸ்பெஷல் :
வரும் ஜூலை 23ம் தேதி நடிகர் சூர்யா தன்னுடைய 49 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க முடிவெடுத்துள்ளது படக்குழு. அதன்படி 'சூர்யா 44 ' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஜூலை 23ம் தேதி வெளியிட உள்ளது படக்குழு. அதே சமயம் 'கங்குவா' படத்தின் மேக்கிங் வீடியோவும் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

