Suriya 40 first look | கொண்டாட்டத்துக்கு தயாராகும் சூர்யா ரசிகர்கள் - 'சூர்யா40' படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு!
முன்னதாக சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாண்டிராஜன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா40. பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்தை தற்போது சூர்யா40 என்றே அழைக்கின்றனர். இந்த படம் சூர்யாவின் 40 வது திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சூர்யா40 திரைப்படத்தில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர். படம் முன்னதாகவே முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிப்போனது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூர்யா 40 படத்தின் பெயர் மற்றும் அதன் ஃபஸ்ட்லுக் புகைப்படங்கள் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது ஜூலை 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முன்னோட்ட புகைப்படம் வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கிளிம்ஸ் வீடியோ ஒன்றுடன் அறிவித்துள்ளது.
#Suriya40FirstLook on July 22 @ 6 PM!#Suriya40 #Suriya40FLon22nd@Suriya_offl @pandiraj_dir @immancomposer @RathnaveluDop @priyankaamohan pic.twitter.com/ZzMNetQf8y
— Sun Pictures (@sunpictures) July 19, 2021
இது ஒரு புறம் இருக்க வருகிற ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவில் பிறந்த நாளை ரசிகர்கள் தற்போதே கொண்டாட துவங்கிவிட்டனர். வாடிவாசல் படக்குழுவினர் வெளியிட்டுள்ள காமன் டிபியும் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது . #SuriyaBdayCDPCarnival என்ற பெயரில் நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். அந்த புகைப்படத்தில் ஆக்ரோஷத்துடன் தனது பெயருடன் கூடிய ஏர் கலப்பையை இழுத்து வருகிறார் சூர்யா.
#SuriyaBdayCDPCarnival 🔥🔥🔥
— Arya (@arya_offl) July 17, 2021
Waiting for first look 😍😍@Suriya_offl pic.twitter.com/iAX93AAuH2
சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘வாடிவாசல்’. சமீபத்தில் இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கின. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடும் விதமாக படம் உருவாகி வருகிறது. மதுரை வட்டார வழக்குடன் , கிராமத்து இளைஞனாக படத்தில் வலம் வருவாராம் சூர்யா. இந்த படத்தில் இடம்பெறும் மாடு பிடி காட்சிகளுக்காக சூர்யாவிற்கு சிறப்பு பயிற்சிகளும் கூட வழங்கப்பட்டுள்ளன. கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஃபஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் பதிவிட்ட தயாரிப்பாளர் “ நமது வரலாறு மற்றும் துணிச்சலைக் குறிக்கும் ஒரு சின்னத்துடன் வாடிவாசல் படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன்” என குறிப்பிட்டுருந்தார். வாடிவாசல் திரைப்படம் சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' என்னும் நாவலை தழுவியே உருவாகி வருகிறது