மேலும் அறிய

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு.. உச்சநீதிமன்றம் சொன்ன பரபரப்பு தீர்ப்பு!

மிழில் மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகை பிரதியுஷா. இவர் தனது 20 வயதில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்தார். 

தற்கொலை செய்துக்கொண்ட பிரபல  நடிகை பிரதியுஷா மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சித்தார்த் ரெட்டியை சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரணடைய அவருக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழில் மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகை பிரதியுஷா. 1998 ஆம் ஆண்டு ராயுடு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.  இவர் தனது 20 வயதில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்தார்.  பிரதியுஷாவும் அவரது நண்பர் சித்தார்த் ரெட்டியும் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதில் பிரதியுஷா இறக்கவே, சித்தார்த் குணமடைந்தார். அவர் மார்ச் மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தில் பிரதியுஷா கும்பத்தினருக்கு சித்தார்த் ரெட்டி மீது பெரும் சந்தேகம் ஏற்பட்டது. 

பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி, இது வெறும் தற்கொலை அல்ல, கூட்டு பாலியல் வன்கொடுமை என்றும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இதற்குப் பின்னால் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.  தனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அவர் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தினார். 

அவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் 24 ஆண்டுகளாகியும் அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின் பிரதியுஷாவின் தாயார் இந்த வழக்கில் வென்றுள்ளார். இந்த வழக்கை முதலில் விசாரித்த சிபிஐ, சித்தார்த்த ரெட்டி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் 2004 ஆம் ஆண்டில் முதன்மை அமர்வு நீதிமன்றம் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 

இது 2011ம் ஆண்டில் உயர்நீதிமன்றம் சென்று 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சித்தார்த் ரெட்டி மற்றும் நடிகை பிரதியுஷாவின் தாயார் சரோஜினி தேவி இருவரும் 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இந்த மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த ஆண்டு நவம்பரில் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து இறுதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் பிரதியுஷா மரண வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி சித்தார்த் ரெட்டி  4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும், தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அபராதத்தை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. சித்தார்த் ரெட்டி சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என பிரதியுஷாவின் தரப்பு தீர்ப்பை கேட்டு கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சித்தார்த் ரெட்டிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டு சிறையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget