மேலும் அறிய

Vettaiyan: தலைவரு நிரந்தரம்! ரஜினிகாந்தின் "வேட்டையன்" எப்போ வர்றான் தெரியுமா? ரிலீஸ் டேட் இதுதான்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது. ரஜினிகாந்துடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சுவாரியர் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

வேட்டையன் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில், வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, அதே தேதியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், வேட்டையன் படமும் அதே தினத்தில் வெளியாக இருப்பது பெரும் பரபரப்பை கோலிவுட்டில் உருவாக்கியுள்ளது.

ஜெய்பீம் படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு உண்டானது.  படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சுவாரியர் ஆகியோர் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. இந்த படத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜெய் பீம் போல வெற்றி பெறுமா?

தரமான கதைக்களத்துடன் வெளியான ஜெய்பீம் படம் அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில், வேட்டையன் படத்திலும் அதேபோல தரமான கதைக்களம் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெயிலர் வெளியாகும் என்று எதிர்பார்ககப்படுகிறது. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் சுமார் 160 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

வேட்டையன் - கங்குவா மோதல்:

மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே தினத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படமும் வெளியாக இருப்பதால் நடப்பாண்டில் மிகப்பெரிய நடிகர்கள் இருவரது படங்கள் மோதிக்கொள்வது இதுவே முதன்முறையாக அமைந்துள்ளது. நடப்பாண்டில் தனுஷின் கேப்டன் மில்லரும், சிவகார்த்திகேயனின் அயலானும் பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்ட பிறகு, நடப்பாண்டில் ஒரே தேதியில் பிரம்மாண்ட நடிகர்கள் இருவரது படங்கள் மோதிக் கொள்வது இதுவே முதன்முறை ஆகும்.

 

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget