சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த - சென்னையில் மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு.!
படத்தில் பணிபுரிந்த சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருந்த காரணத்தால் மீண்டும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது
சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் தான் "அண்ணாத்த". பிரகாஷ்ராஜ், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி என்ற மிகப்பெரிய நடிகர் பட்டாளத்துடன் இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தல அஜித்குமாரை வைத்து பல சிறப்பான படங்களை கொடுத்த சிறுத்தை சிவா அவர்கள் இயக்க கலாநிதி மாறன் இந்த படத்தினை தயாரித்து வருகின்றார்.
இமான் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் தரமாக உருவாகி வருகின்றன. கொரோனா அச்சம் சற்று தணிந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. ஆனால் தொடங்கிய சில நாட்களிலேயே படத்தில் பணிபுரிந்த சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருந்த காரணத்தால் மீண்டும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது.
ரஜினிகாந்த உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் சென்னை திரும்பினார். இந்நிலையில் சுமார் 3 மாத இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் அதற்கேற்ப அரங்கங்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் அளவு என்பது மீண்டும் உயர தொடங்கியுள்ளது என்பது குறிப்படத்தக்கது. ஆதலால் படப்பிடிப்பு பணிகளுக்கும் மிகுந்த கவனத்துடன் நடந்து வருகின்றது.