Sundar C New Movie: தொடர்கிறதா கலகலப்பு..? மீண்டும் இணையும் சுந்தர்.சி - ஜீவா.!
சென்னை: இயக்குநர் சுந்தர். சி தனது அடுத்த படத்தில் ஜீவாவை இயக்குகிறார்.
தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் எடுப்பதில் சுந்தர். சி கில்லாடி. அவரது அனைத்து படங்களிலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக அந்த காமெடி காட்சிகள் அனைத்து காலம் கடந்து நிற்பவை.
இடையில் சில காலம் இயக்கத்தில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் கலகலப்பு, அரண்மனை படங்கள் மூலம் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர்களில் ஒருவரானார்.
புதிய தொழில்... ஆடைகள்... அலங்காரம்... தொழிலதிபர் ஆகிறார் வனிதா!
அவர் இயக்கிய கலகலப்பு திரைப்படம் இன்றுவரை அனைவரையும் சிரித்து ரசிக்க வைக்கிறது. சந்தானத்தின் கேரியரில் முக்கியமான படமும் கலகலப்பு. இதனையடுத்து அவர் எடுத்த அரண்மனை படமும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து அவர் அரண்மனை சீரிஸில் கவனம் செலுத்த தொடங்கினார். சமீபத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் அவர் இயக்கிய அரண்மனை 3 படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக போட்ட பணத்தை எடுத்துவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Biggboss Tamil 5 | விளையாட்டாக சண்டையிட்ட மது - தாமரை ; சீரியஸான போட்டியாளர்கள்
இந்நிலையில் அவர் ஜீவாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். கதாநாயகனாக ஜீவாவும், கதாநாயகியாக ராஷிகண்ணாவும் ஒப்பந்தமாகியுள்ளனர். படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென தெரிகிறது. காமெடிக்கு அதிகளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட இருக்கிறது.
‛நல்லவேளை... அதை படத்தில் காட்டவில்லை...’ அசல் ‛ஜெய்பீம்’ சந்ரு சிறப்பு பேட்டி!
டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருக்கும் படக்குழு ஒரேகட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிப்பதற்கு முடிவு செய்துள்ளது. விரைவில் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக சுந்தர். சி ஜீவாவை வைத்து கலகலப்பு 2 படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் இப்படத்தை எப்படியும் ஹிட் ஆக்க வேண்டும் என்ற முனைப்பில் சுந்தர். சி பட வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Seenu Ramasamy Upcoming Film: பென்னிகுவிக் வாழ்க்கை படமாகிறது.... சீனு ராமசாமி இயக்குகிறார்!
ஜெய்பீம் பற்ற வைத்த நெருப்பு... ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ActorSuryaAgainstVanniyars