Jacqueline Fernandez: உனக்காக சிறையில் நவராத்திரி விரதம் இருக்கிறேன் பேபி.. நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் கடிதம்!
சுகேஷ் சந்திர சேகர் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
பண மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் பேபி உனக்காக விரதம் இருக்கிறேன் என நடிகை ஜாக்குலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பண மோசடி வழக்கில் நாடு முழுவதும் பிரபலமான சுகேஷ் சந்திரசேகர், இரட்டை இலை சின்னம் பெற்று தர லஞ்சம் பெற்றது உள்ளிட்ட மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளார். இரட்டை இலை சின்னம் பெற மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த இவர், தொழிலதிபர் ஒருவருக்கு ஜாமீன் பெற்று தருவதாக கூறி அவருடைய மனைவியிடம் இருந்து ரூ.200 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி வழக்குகளை விசாரித்து வரும் அலமாகத்துறை, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸையும் குற்றவாளியாக சேர்த்துள்ளது.
பாலிவுட் நடிகைகள் மற்றும் மாடலிங் பெண்களை குறி வைத்து அவர்களுக்கு பரிசு வழங்கி பழகிய சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னாண்டஸையும் தனது வலையில் விழ வைத்துள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு ரூ.5 கோடி மதிப்பிலான கார்கள், விலையுயர்ந்த பரிசு பொருட்கள், பணம், குதிரை உள்ளிட்டவற்றை பரிசாக கொடுத்துள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் நெருக்கமாக பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், ஜாக்குலின் பெர்னாண்டஸூக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரை, ஜாக்குலின் பெனாண்டஸ் அடிக்கடி சென்று சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜாக்குலின் பெனாண்டஸ்க்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது. அதில், ”பேபி நவராத்திரி தொடங்குவதால் என் வாழ்க்கையில் முதல்முறையாக உனக்காக 9 நாட்களுக்கு விரதம் இருக்கப் போகிறேன். உன்னைச் சுற்றி இருக்கும் கெட்டது விலக வேண்டும் என்பதற்காக, உனது நன்மைக்காக இந்த விரதம் இருக்க உள்ளேன்.
தேவியின் சக்தியால் உண்மை வென்று நமக்கு நல்லதே நடக்கும். விரைவில் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ்வோம். உன்னையும் என்னையும் பார்த்து சிரித்தவர்கள், குறைத்து மதிப்பிட்டவர்கள் இனிமேல் வெளியில் முகத்தைக் காட்ட முடியாது. அவர்களின் உண்மை வெளிவரும் நேரம் நெருங்கி விட்டது. நம் மீதான குற்றச்சாட்டு எதுவும் உண்மையாக இருக்காது” எனக் கூறியுள்ளார்.
சிறையில் இருந்தபடி விரதம் இருக்கபோவதாக ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Hi Nanna Teaser: உருக வைக்கும் தந்தை - மகள் அன்பு.. நெகிழ வைக்கும் காதல்.. ட்ரெண்டாகும் “ஹாய் நன்னா” டீசர்..!
Leo Controversy: 'தளபதி விஜய்'... சர்ச்சையுடன் பிறப்பிக்கப்பட்ட லியோ படத்தின் அனுமதி அரசாணை...