Hi Nanna Teaser: உருக வைக்கும் தந்தை - மகள் அன்பு.. நெகிழ வைக்கும் காதல்.. ட்ரெண்டாகும் “ஹாய் நன்னா” டீசர்..!
நடிகர் நானி நடித்து வரும் “ஹாய் நன்னா” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. HiNannaTeaser
நடிகர் நானி நடித்து வரும் “ஹாய் நன்னா” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.
தமிழில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான “நான் ஈ” படத்தின் மூலம் ரசிகர்களிடம் பரவலாக அறியப்பட்டவர் நானி. தமிழில் சில படங்கள் அவரது நடிப்பில் வெளியாகியிருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து வரும் நானியின் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் கடைசியாக அவர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் நானியின் 30வது படமாக “ஹாய் நன்னா” உருவாகியுள்ளது.
ஷவுர்யுவ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக “சீதா ராமம்” புகழ் மிர்ணாஸ் தாகூர் நடிக்கிறார். மேலும் ஜெயராம், பேபி கியாரா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹசீம் அப்துல் வஹாப் , ஹாய் நன்னா படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படியான நிலையில் வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள “ஹாய் நன்னா” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இதில் தந்தை நானியின் அரவணைப்பில் வளரும் பேபி கியாராவுக்கு அப்பாதான் உலகமே. அவரின் பெஸ்ட் பிரண்ட், கோபப்படாத மனிதர் என எல்லாமுமாக நானி இருக்கிறார். இப்படியாக செல்லும் கியாராவின் வாழ்வில் புதிய நண்பராக மிர்ணாள் தாகூர் வருகிறார். இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது போல காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது. நானியை விட டீசரில் ரசிகர்களை அதிகம் கவர்கிறார் மிர்ணாள் தாகூர்.
முன்னதாக ஹாய் நன்னா படம் குறித்து பேசிய நடிகை மிருணாள் தாக்கூர் , இந்த படத்தின் கதை, தான் படித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என்று கூறி இருந்தார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. மேலும் தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்ட கதைகளுக்கு என்றுமே மொழி ஒரு தடையாக இருந்தது இல்லை. அதனால் அனைத்து மொழி ரசிகர்களையும் இப்படம் எளிதாக சென்றடையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Bigg Boss 7 tamil: "நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா?” .. ‘டா’ போட்டு பேசிய ஜோவிகாவை வெளுத்து வாங்கிய விஷ்ணு..!