Watch Video: 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் தாமரப்பூவுக்கும் பாடல்.. மேடையில் பாடி மெய்சிலிர்க்க வைத்த சுஜாதா மோகன்!
Sujatha Mohan : இந்த சூப்பர் ஹிட் பாடலை சுஜாதா மோகனுடன் இணைந்து பாடியிருந்தார் பாடகர் கிருஷ்ணசந்தர். இப்பாடல் 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் டூயட் பாடல்களில் ஒன்றாக கொண்டாடப்பட்டது.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் ஏராளமான பாடல்களை தன்னுடைய இனிமையான குரலால் வசப்படுத்தியவர் பின்னணி பாடகி சுஜாதா மோகன். இந்த இரு மொழிகள் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட படங்களின் பாடல்களையும் பாடியுள்ளார். காலத்தால் அழியாத ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார். 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு 'கலைமாமணி' விருது வழங்கி இவரை கவுரவித்தது.
இசை நிகழ்ச்சியின் நடுவர் :
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ரோஜா, மின்சாரக் கனவு, ஜீன்ஸ், ஜென்டில்மேன், புதிய முகம் என எண்ணற்ற பாடல்களை பாடி உலகளவில் உள்ள ரசிகர்களை பெற்றுள்ளார். தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பாடல் சம்பந்தமான ரியாலிட்டி ஷோகளுக்கு நடுவராக இருந்து இன்றைய தலைமுறையினருக்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார் சுஜாதா மோகன்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 :
அந்த வகையில் விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் இசை போட்டி ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. சீனியர்களுக்கான போட்டி தனியாகவும் ஜூனியர்களுக்கான போட்டி தனியாகவும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜூனியர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 9 சமீபத்தில் தான் முடிவடைந்தது. அந்த சீசன் வெற்றியாளராக ஸ்ரீநிதா டைட்டிலை கைப்பற்றினார்.
சூப்பர் சிங்கர் சீசன் 10 :
அதன் தொடர்ச்சியாக கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 16) முதல் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பின்னணி பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், மனோ, சுஜாதா மோகன் மற்றும் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுஜாதாவின் மேஜிக் :
கடந்த வாரம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பாடகி சுஜாதா மோகன் தன்னுடைய குரலில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பசும்பொன்' படத்தில் இடம் பெற்ற "தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணெய்க்கும்..." என்ற பாடலை பாடி மேடையில் ஒரு மேஜிக்கல் மொமெண்ட்டை ஏற்படுத்தினார். இந்த சூப்பர் ஹிட் பாடலை சுஜாதா மோகனுடன் இணைந்து பாடியிருந்தார் பாடகர் கிருஷ்ணசந்தர். இப்பாடல் 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் டூயட் பாடல்களில் ஒன்றாக கொண்டாடப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்றும் இந்த பாடலுக்கு இருக்கும் மவுசு சிறிதும் குறையவே இல்லை.
பல ஆண்டுகளுக்கு பிறகு சுஜாதா மோகன் குரலில் இந்தp பாடலை மீண்டும் சூப்பர் சிங்கர் மேடையில் கேட்டது அவரின் ரசிகர்களுக்கு புல்லரித்து போனது. லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் முக்கியமான சண்டைக் காட்சியில் சமீபத்தில் வைத்திருந்த நிலையில், இப்பாடலை தற்போது பலர் ரீல்ஸ் செய்து ட்ரெண்டிங்காக்கி வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.