மேலும் அறிய

Suhasini: "நான் லீக் செய்துவிடுவேன் என என்னிடம் சொல்வதில்லை" - கமல் - மணிரத்னம் கூட்டணி குறித்து சுஹாசினி!

Suhasini : கமல்ஹாசன் மணிரத்னம் காம்போவில் 36 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நாயகன் திரைப்படம் என்றுமே என்னுடைய பேவரைட் திரைப்படம். ஒரு ஃபேனாக மீண்டும் அவர்கள் இருவரும் இணைவது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

80ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுஹாசினி. தென்னிந்தியாவை மையப்படுத்தி தெற்கின் எழுச்சி என்ற பெயரில் "ABP Southern Rising Submit 2023" என்ற பெயரில் பிரமாண்ட கருத்தரங்கு சென்னை தாஜ் கோரமண்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் மற்றும் பிரபலமான செலிபிரிட்டிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை  சுஹாசினி பல ஸ்வாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார்.

Suhasini:

கமல் - மணி காம்போ :

கமல்ஹாசன் மணிரத்னம் காம்போவில் 36 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நாயகன் திரைப்படம் என்றுமே என்னுடைய பேவரைட் திரைப்படம். அப்போது தெரியாது நான் மணிரத்தனத்தை தான் திருமணம் செய்து கொள்ளபோகிறேன் என்று. ஒரு ஃபேனாக மீண்டும் அவர்கள் இருவரும் இணைவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அந்த படம் பற்றிய விஷயங்களை லீக் செய்து விடுவேன் என என்னிடம் மணி சொல்வதில்லை. ஆனால் விரைவில் அதன் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது.

மிகவும் பிடித்த ரோல் எது ?

கடந்த 42 ஆண்டுகளாக நடித்து கொண்டு இருப்பதால் நடிப்பு என்பது எனக்கு ஈஸியாக இருக்கிறது. ஒரு ஷோ ஹோஸ்ட்டாக இருப்பதால் என்னால் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது. கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பதால் நாம இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணி இருக்கலாமே என தோணும். ஆனால் என்னுடைய ஷோக்கு வரும் கெஸ்ட் அனைவரும் மிகவும் கம்பர்ட்டாக ரிலாக்ஸாக உணர்கிறார்கள். அதை பார்க்கும் போது நான் நன்றாக தான் செய்கிறேன் என தோன்றும். ஒரு இயக்குநராக நடிகர்களை இயக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் இந்த மூன்றில் இயக்குநர் ரோல் என்பது மிகவும் பிடிக்கும்.

 

Suhasini:

என்னுடைய படங்களை நான் இயக்குவதற்கு முன்னர் ஸ்கிரிப்டை பார்த்து இது இப்படி இருக்கலாம் அது அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என சில திருத்தங்களை மணி சொல்லவர். ஆனால் ஷூட்டிங் முடிந்த பிறகு அதில் தலையிட மாட்டார்.

பேவரட் இயக்குநர் யார் ?
 
இன்றைய கலக்கட்டது இயக்குநர்களில் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், ரஞ்சித், மாரி செல்வராஜ், நெல்சன், லோகேஷ் கனகராஜ்  என பல இயக்குநர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் ஆக்டிங் கூட காவலன் படத்திற்கு பிறகு எனக்கு அவருடைய நடிப்பு மிகவும் பிடிக்கிறது.

வுமன் சென்ட்ரிக் படங்கள் :

மனதில் உறுதி வேண்டும் போன்ற ஸ்ட்ராங்கான படங்கள் மற்றும் எனக்கு, ராதிகா, ரேவதிக்கு வந்ததுபோல வுமன் சென்ட்ரிக் திரைப்படங்கள் இந்த காலகட்டத்தில் அவ்வளவாக வருவதில்லை. ஆனால் இன்று இருக்கும் நடிகைகளுக்கு முன்பை விட எக்ஸ்போஸ்சர் அதிகமாக இருக்கிறது. அவர்களால் இன்னும் பெட்டராகவே பண்ண முடியும். அதனால் அவர்களுக்கு அது போன்ற சப்ஜெட் படங்கள் நிறைய கிடைத்து அவை வெற்றியும் பெற வேண்டும்.

மலையாளத்தில் சுஹாசினி நடித்துள்ள வெப் சீரிஸ் ஒன்று விரைவில் வெளியாக உள்ளது. அதை தவிர இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்.. ஜனநாயகன் பார்த்து கண்ணீருடன் வெளிவந்த ரசிகர்கள்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்.. ஜனநாயகன் பார்த்து கண்ணீருடன் வெளிவந்த ரசிகர்கள்!
Actor Vimal : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை! ஷாக்கில் ரசிகர்கள்
Actor Vimal : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை! ஷாக்கில் ரசிகர்கள்
JanaNayagan Review :400 கோடியில் உருவாக்கப்பட்ட இன்ஸ்டா ரீல்...ஜனநாயகன் திரைப்பட விமர்சனம்
JanaNayagan Review :400 கோடியில் உருவாக்கப்பட்ட இன்ஸ்டா ரீல்...ஜனநாயகன் திரைப்பட விமர்சனம்
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Embed widget